[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
  • BREAKING-NEWS முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்
  • BREAKING-NEWS குன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு

சென்னையிலிருந்து மதுரைக்கு புதிய ரயில் சேவை?

new-train-service-from-chennai-to-madurai

சென்னையில் இருந்து மதுரைக்கு புதிய பகல் நேர விரைவு ரயில் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தென்னக ரயில்வேயின் பொதுமேலாளர் குல்ஷேஸ்த்ரா தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் வரை தென்னக ரயில்வேயின் கீழ் செய்து முடிக்கப்பட்டுள்ள பணிகள் குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்ட்ரல் அருகே உள்ள தென்னக ரயில்வேயின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, தீபாவளிக்கு 42 சிறப்பு ரயில்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 8 ரயில்கள் தேதி நெருங்கும் போது அறிவிக்கப்டும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் சென்னையில் இருந்து மதுரைக்கு புதிய பகல் நேர விரைவு ரயில் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறிய அவர், தமிழகத்தில் ஆளில்லா ரயில்வே கேட் இல்லாத ஒரு நிலையை உருவாக்கியுள்ளதாக குல்ஷேஸ்த்ரா ‌கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close