[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
  • BREAKING-NEWS முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்
  • BREAKING-NEWS குன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்

former-minister-parithi-ilamvazhuthi-passed-away

சென்னையில் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல்நலக் குறைவால் காலமானார்.

சென்னையில் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 58. கடந்த 2006-11 ஆம் ஆண்டில் திமுக அமைச்சரவையில் செய்தி மற்றும் விளரம்பரத் துறை அமைச்சராக பரிதி இளம்வழுதி பதவி வகித்துள்ளார். 2013-ஆம் ஆண்டு திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் அமமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் பரிதி இளம்வழுதி.

1996-2001-ல் சட்டப்பேரவை துணை சபாநாயகராக பதவி வகித்துள்ள பரிதி இளம்வழுதி, 1989-2011-ஆம் ஆண்டு வரை எழும்பூர் தொகுதியில் தொடர்ச்சியாக எம்எல்ஏ பதவி வகித்தார். 2011-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எழும்பூர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் நல்லத்தம்பியிடம் தோல்வியை சந்தித்தார்.

இதனிடையே இன்று காலை உடல்நலக் குறைவால் பரிதி இளம்வழுதி உயிரிழந்தார். சென்னை அடையாறில் உள்ள மருத்துவமனையில் அவரின் உயிர் பிரிந்தது. இதனை அவரது உறவினர்கள் உறுதி செய்துள்ளனர். பரிதி இளம்வழுதியின் மறைவிற்கு பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close