[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS இன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்!
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்

விலை குறைப்பிற்குப் பிறகும் பெட்ரோல், டீசல் விலை தொடர் ஏற்றம்

diesel-prices-hiked-across-metro-cities-petrol-closer-to-rs-85-73-in-chennai

விலை குறைப்பிற்குப் பிறகு, பெட்ரோல், டீசல் விலை தொடர் ஏற்றத்திலேயே உள்ளது. 

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 12 காசுகள் விலை அதிகரித்து 85 ரூபாய் 73 காசுகளுக்கு விற்கப்படுகிறது. டீசல் லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து 79 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தமிழகத்தில் க‌டந்த மார்‌ச் 31ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 2 கோடியே 56 லட்சத்து 6‌ ஆயிரத்து 847 வாகனங்க‌ள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் நாளொன்றுக்கு 3 கோடியே 22 லட்சம் லிட்டர் அளவுக்கு பெட்ரோல், டீசல் விற்பனையாகி வருகிறது. கடந்த ஆகஸ்ட் 2017 முதல் பெட்ரோல், டீசலின் விலை லிட்டர் ஒன்றுக்கு சராசரியாக 16 ரூபாய் உயர்ந்துள்ளது. இருசக்கர வாகனங்களை பயன்படுத்துபவர்களில் குறிப்பிட்ட விகிதத்தினர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். சமீபத்தில் பெட்ரோல் விலை 87 ரூபாயையும், டீசல் விலை 80 ரூபாயையும் எட்டியது. 

பெட்ரோல், டீசல் விலை தொடர் ஏற்றத்தை பல்வேறு தரப்பினரும் எதிர்த்த நிலையில், அவற்றின் விலைகளை லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசுகள் குறைத்து மத்திய அரசு அறிவித்திருந்தது. கடந்த 5 ஆம் தேதி விலை குறைப்பு அமலுக்கு வந்த நிலையில், அதன் பிறகு பெட்ரோல் லிட்டருக்கு ஒரு ரூபாய் 3 காசுகளும், டீசல் லிட்டருக்கு இரண்டு ரூபாய் 9 காசுகளும் விலை‌ அதிகரித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close