[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

விஜயகாந்த் வீட்டில் 2 பசுமாடுகள் திருட்டு - காவல்துறை விசாரணை

dmdk-chief-secretary-vijayakanth-cows-theft-in-his-new-house

தேமுதிக பொதுச்செயலளார் விஜயகாந்த் வீட்டிலிருந்து 2 பசுமாடுகள் திருடப்பட்டுள்ளது.

விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் சென்னை, ஐயப்பன் தாங்கலை அடுத்த காட்டுப்பாக்கத்தில் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் அவ்வீட்டின் பாதுகாப்பு பணியில் இரண்டு பேர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக வீடு கட்டும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அந்த வீட்டில் விஜயகாந்தின் 3 மாடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. 

நேற்று இரவு 3 மாடுகளும் இருந்த நிலையில், இன்று காலையில் எழுந்து பார்த்தபோது 2 மாடுகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பாதுகாவலர்கள் மாடுகளை தேடினர். எங்கு தேடியும் மாடுகள் கிடைக்கவில்லை என்பதால், பூந்தமல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மாடுகள் காணாமல் போனது தொடர்பாக விசாரணை செய்தனர். மாடுகள் அதுவாக வழிதவறிச் சென்றுவிட்டனவா? அல்லது யாரேனும் மாடுகளை திருடிச்சென்றனரா? என்ற கோணத்தில் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close