[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS இன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்!
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்

ரூ.10 நோட்டுகளுக்கு ஆசைகாட்டி ரூ.55 ஆயிரத்தை அடித்துச்சென்ற திருடன்

rs-55-thousand-theft-in-chennai-police-inquiry-with-cctv-footage

சென்னை பாரிமுனையில் 10 ரூபாய் நோட்டுகளை வீசி 55 ஆயிரம் திருடிச் சென்றவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

சென்னை, கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த பிரேம்குமார், தனது காரில் பாரிமுனைக்கு பொருட்கள் வாங்கச் சென்றார். அங்குள்ள மசூதி அருகில் காரை நிறுத்தி விட்டு ஓட்டுனர் கண்ணனை விட்டுச் சென்றார். அப்போது அங்கு வந்த ஒருவர் கண்ணனிடம், கீழே பாருங்கள் 10 ரூபாய் நோட்டுக்கள் சிதறி கிடக்கிறது என கூறியுள்ளார். ஓட்டுநர் கண்ணன் உடனடியாக குனிந்து ரூபாய் நோட்டுகளை ஒவ்வொன்றாக அவர் பொறுக்கி எடுத்தார். 

அந்த சமயம் பார்த்து காரின் பின்பக்க கதவை திறந்து சீட்டில் இருந்த சிறிய பையை எடுத்துக் கொண்டு மர்ம நபர் நழுவி விட்டார். பொருட்கள் வாங்கச் சென்ற பிரேம்குமார் திரும்பி காருக்கு வந்த போதுதான் பின் சீட்டில் வைக்கப்பட்டிருந்த பை காணாமல் போனது தெரியவந்தது. அந்த பைக்குள் ரூ.55 ஆயிரம் மற்றும் வரைவோலை புத்தகம் ஆகியவை இருந்துள்ளன. இதுகுறித்து பிரேம்குமார் பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் சிசிடிவி கேமரா காட்சிகளைக்கொண்டு திருடனை தேடி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close