[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

கணவன் கண் முன்னே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மனைவி!

4-arrested-for-rape-in-thiruvallur

திருவள்ளூரில் கணவனை தாக்கிவிட்டு மனைவியை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாலகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் முரளி. அவர் தனது மனைவியோடு கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, அடர்ந்த காட்டுப்பகுதி வழியாக வந்துள்ளார். கோங்கல் அருகே இரு சக்கர வாகனத்தை வழி மறித்த 4 பேர், முரளியை தாக்கி விட்டு அந்த பெண்ணை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பியதாக கூறப்படுகிறது. தாக்குதலுக்கு ஆளான முரளி, அருகில் இருந்த கிராம மக்களின் துணையோடு வர 4 பேரும் தப்பி ஓடினர். இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசாருக்கு அளிக்கப்பட்ட தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். 

அப்போது, கோங்கல் பகுதியை சேர்ந்த முனியசாமி, மோகன் மற்றும் 18 வயதுக்கு குறைவான 2 பேர் என 4 பேர் இணைந்து கூட்டு பாலியல் கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பேரையும் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட முனியசாமி, மோகன் ஆகியோரை பொன்னேரியில் உள்ள நீதிபதி சதீஷ்குமாரின் இல்லத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அதே போல, 18 வயதுக்கு குறைவான 2 பேரை திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close