[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

முதல்வர் மீதான ஊழல் புகார் - தீர்ப்பு ஒத்திவைப்பு

corruption-bane-department-said-no-fault-on-cm-palanisamy

முதலமைச்சர் பழனிசாமி மீதான ஊழல் புகாரில் முகாந்திரம் இல்லையென உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் ஒதுக்கப்பட்டதில் ரூ.4,800 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக திமுகவின் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார். இதுகுறித்து விசாரித்த லஞ்ச ஒழிப்புத்துறை தனது அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் முதல்வர் மீதான புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையிலேயே தெரியவந்துள்ளதால், இதுகுறித்து மேலும் விசாரிக்க வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணிடம் நெடுஞ்சாலைத்துறையும், லஞ்ச ஒழிப்புத்துறையும் முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் தானே உள்ளது என நீதிபதி கேள்வியெழுப்பினார். 

அதற்கு பதிலளித்த விஜய் நாராயண், லஞ்ச ஒழிப்புத்துறை தன்னிச்சையான அமைப்பு என்றும், இது உள்துறையின் கீழ் வரவில்லை என்றும் கூறினார். இந்த துறை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்த துறையின் கீழ்‌ வருவதாகவும் தெரிவித்தார். முதல்வருக்கோ, டி.ஜி.பி.-க்கோ லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லையென்றும், மாநில ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு மட்டும் தெரிவித்தால் போதும் என்றும் அவர் கூறினார். ஊழல் கண்காணிப்பு ஆணையரை யார் நியமிப்பார்கள் என்ற கேள்விக்கு, அரசுதான் நியமிக்கும் என்று விஜய் நாராயண் தெரிவித்தார். இதனை அடுத்து வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close