[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

“தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது” - பொன்.ராதாகிருஷ்ணன்

central-minister-pon-radhakrishnan-said-bjp-vote-bank-increase-in-tamilnadu

பாஜக தேர்தலை தள்ளிப்போட நினைத்ததே இல்லையென்றும், தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

டெல்லி சென்ற முதலமைச்சர் பழனிசாமி இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் நலனை பாதிக்கும் திட்டங்களை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தார். மறைந்த முதலமைச்சர்கள் அண்ணாவுக்கும் ஜெயலலிதாவுக்கும் பாரதரத்னா விருது வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டதாக கூறினார். சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்ட கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து அமைக்க நடவடிக்கை தேவை என்று பிரதமரிடம் கோரியதாகவும் கூறினார்.

இந்நிலையில் பிரதமர் மற்றும் முதலமைச்சர் சந்திப்பு தொடர்பாக மதுரையில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “தமிழக முதல்வர் இன்று டெல்லிக்கு சென்றது தமிழக அரசின் வளர்ச்சி திட்டங்களுக்காகவே. அதிமுகவின் உட்கட்சி பிரச்னை குறித்து பேச முதலமைச்சர் டெல்லிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. பாரதிய ஜனதா கட்சி தேர்தலை தள்ளிப் போட வேண்டும் என நினைத்ததே இல்லை. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது” என்று தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close