[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்

புகாருக்கெல்லாம் ராஜினாமா இல்லை: டெல்லியில் முதலமைச்சர் பேட்டி

cm-palanisamy-meet-the-press-at-delhi

காகிதத்தில் கொடுக்கப்படும் புகாருக்கெல்லாம் பதவி விலகவேண்டும் என்றால் இந்தியாவில் யாரும் பதவியில் இருக்க முடியாது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரைமணி நேரம் நீடித்தது.

சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, ‘பிரதமரை சந்தித்து தமிழக நிலைபற்றியும் தேவையான நிதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தேன். பேரரிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற்பட்டது. அதை நிறைவேற்றித்தர வேண்டும் என்று கேட்டேன். எம்.ஜி.ஆரின் பிறந்த நூற்றாண்டை நினைவு கூறும்விதமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் என பெயர் வைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற் றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதையும் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டேன். எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் விரைந்து அமைத்திடவும் கோரிக்கை வைத்தேன். சென்னை மாநகரத்தின் நிரந்தர வெள்ளத்தடுப்பு கட்டமைப்பு பணிகளுக்கு தேவைப்படும் சுமார் 4445 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். சேலத்தில் ராணுவ தளவாட ஆலை அமைப்பது பற்றியும் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் கோரிக்கை வைத்தேன்.  


கன்னியாகுமரியில் காணாமல் போகும் மீனவர்களை மீட்க ஹெலிகாப்டர் வசதியுடன் கூடிய நிரந்தர கடற்படை தளம் அமைக்கப்பட வேண்டும் என்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி அமைக்க ஆவண செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தோம். மேலும் ஓசுர், நெய்வேலி, ராமநாதபுரத்துக்கு விமான சேவைகளை விரைந்து செயல்படுத்த கேட்டுள்ளேன்’ என்றார்.

பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ‘எதிர்க்கட்சி வைக்கும் ஊழல் புகார் பற்றி கேட்கின்ற னர். காகிதத்தில் கொடுக்கும் புகாருக்கெல்லாம் அமைச்சரவை ராஜினாமா செய்ய வேண்டுமென்றால், இந்தியாவில் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டியதுதான். டிடிவி தினகரனை, துணை முதலமைச்சர் சந்தித்தது பற்றி கேட்கிறார்கள். அதுபற்றி துணை முதலமைச்சர் தெளிவாக விளக்கம் கொடுத்து விட்டார். ஹைட்ரோகார்பன் திட்டம் பற்றி கேட்கிறீர்கள். தமிழகத்தில் பொதுமக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம். தேர்தலுக்கு இன்னும் நேரம் இருப்பதால் இப்போது கூட்டணிக்கு அவசரமில்லை’ என்றார்


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close