[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

புதிய உச்சத்தை நெருங்கும் தங்கத்தின் விலை... வாடிக்கையாளர்கள் கவலை

gold-price-continuously-increased

இந்தியாவில் பண்டிகை சீசன் சூடுபிடித்துள்ள நிலையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 24,000 ரூபாயை கடந்து புதிய உச்சத்தை நெருங்கி வருகிறது.

சென்னையில் தற்போது ஒரு சவரன் விலை 24,064 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை 3,008 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரத்தில் சவரனுக்கு 744 ரூபாய் அதிகரித்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி தங்கம் 24,480 ரூபாய்க்கு விற்பனையானது. இதுதான் தங்கம் இதுவரை கண்ட அதிகபட்ச விலையாகும். அமெரிக்காவும் கனடாவும் தடையற்ற வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தத்தை நிறைவேற்றியிருப்பதால் சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்திருப்பதும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்திருப்பதும் தங்கம் விலை உயர காரணமாக கூறப்படுகிறது. தீபாவளியை ஒட்டி நாட்டில் தங்கம் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்பதால் அதன் விலை மேலும் உயரவே வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close