[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.29 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
  • BREAKING-NEWS ரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
  • BREAKING-NEWS 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS மோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி

ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

red-alert-withdraw-in-tamilnadu

தமிழகத்தில் அதீத கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.

வரும் 7-ஆம் தேதி தமிழகத்தில் அதீத கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. 7-ஆம் தேதி 25 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால் தமிழகத்தில் நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப் பட்டது. மக்கள் அபாயகரமான இடங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் கூறப் பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கடலுக்கு சென்றவர்களை திருப்பி அழைக்கவும் முடிவு செய்யப்பட்டது.  

இந்நிலையில் இந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்படுவதாக வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று தெரிவித்தார். செய்தியாளர்களிடம்  பேசிய அவர் கூறும்போது, ’ 6 மாவட்டங்களுக்கு விடப்பட்டிருந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்படுகிறது. மீனவர் கள் குமரி, லட்சத்தீவு கடல் பகுதி, மத்திய தென்கிழக்கு அரபி கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் . வரும் 8 ஆம் தேதி வரை கனமழை பெய்யும். சென்னை உட்பட ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது’ என்று தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close