[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா!
  • BREAKING-NEWS பெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது! - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு

ஒன்றரை வயது குழந்தையை கடத்தியது ஏன்? கைதான தம்பதி உருக்கம்..!

childless-labourer-kidnaps-baby-boy-in-tirupur-arrested

திருப்பூரில் குழந்தை பாக்கியம் இல்லாததால் இன்னொருவரின் பிள்ளையை கடத்திய கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் கருவம்பாளையம் பகுதியில் ஒடிசாவை சேர்ந்த புத்ததேவ், பேபிராணி என்ற கணவன் மனைவி வசித்து வருகின்றனர். இவர்களின் ஓன்றரை வயது ஆண் குழந்தை வீட்டிற்கு வெளியே விளையாடிய நிலையில் காணாமல் போயுள்ளது. இது குறித்து புத்ததேவ் காவல்துறையில் புகார் அளித்தார். 

காவல்துறையினரின் விசாரணையில், அதே பகுதியில் கடந்த 4 மாதங்களுக்கு முன் வசித்த சங்கர்ஷன் சேத்தி என்பவர் குழந்தையை கடத்தியது தெரியவந்தது. இதனை அடுத்து கோவை அருகே பதுங்கி இருந்த சங்கர்ஷன் சேத்தி மற்றும் அவரது மனைவி சுசித்ராவை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து குழந்தை மீட்டுள்ளனர். பிள்ளைப்பேறு இல்லாததால், தெருவில் விளையாடிய குழந்தையை கடத்தியதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close