[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

இடி, மின்னல் வந்தால் இதையெல்லாம் செய்யக் கூடாது..!

how-to-protect-from-thunderstorms-and-lightning

இடி மற்றும் மின்னலினால் ஏற்படும் அபாயத்தை மக்கள் குறைத்து மதிப்பிடுவதாலும் விழிப்புணர்வு இல்லாததாலும் மனித உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் அதிமாக ஏற்படுகின்றன. மழைக்காலம் தொடங்கி விட்ட நிலையில் இடி,மின்னல்களில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி,இடி,மின்னல்கள் ஏற்படும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி பார்க்கலாம்.

  • மழைக்காலங்களில் வீட்டுக்கு வெளியே இருக்கும்போது மின்னல் மின்னினால் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும். 
  • அருகில் கட்டடங்கள் எதுவும் இல்லாவிட்டால் பள்ளமான இடம், அகழி, குகை போன்ற இடத்திற்கு பத்திரமாக சென்றுவிடவேண்டும். 
  • இடி,மின்னல் ஏற்படும் போது மரத்திற்கு அடியில் நிற்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். 
  • ஏனென்றால் உயரமான மரங்களை மின்னல் எளிதாக தாக்கக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. 
  • மின்சாரம் கடத்தும் பொருட்களிடமிருந்தும் தள்ளி இருக்க வேண்டும். 
  • நெருப்பு இருக்கும் இடங்கள், ரேடியேட்டர்கள், அடுப்பு, உலோக பொருட்கள், மற்றும் தொலைபேசிகள் ஆகியவற்றில் இருந்து தள்ளி இருக்க வேண்டும்.
  • நீரினுள் இருந்தால் அந்நீர்நிலையினை விட்டு வெளியே வந்து விட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. 
  • படகு மற்றும் ஓடம் போன்றவற்றில் நீர் நிலைகளில் பயணித்து கொண்டிருந்தால் உடனே கரை திரும்ப வேண்டும். 
  • சிறிய அளவு மின்சாரத்தை உணரும் போதோ உடலில் உள்ள ரோமங்கள் சிலிர்க்கும் போதோ அல்லது உடல் கூச்சம் ஏற்படும்போதோ மின்னல் தாக்குவதற்கான அறிகுறிகளாக கருதி அச்சமயம் தரையில் உடனடியாக அமர்ந்திட வேண்டும். 
  • கால்நடைகளை இடிதாங்கி பொருத்திய பாதுகாப்பான இடத்தில் இருக்கச் செய்வதன் மூலம் மின்னல் தாக்குதலிலிருந்து காப்பாற்ற முடியும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close