[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS இன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்!
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்

சிசிடிவி காட்சிகளை நிறுத்தச் சொன்னது யார்? - ஆணையத்தில் அப்போலோ பதில்

apollo-files-affidavit-on-cctv-footage-matter-in-arumuga-saami-investigation

சிசிடிவி காட்சிகளை நிறுத்தச் சொன்னது யார் என்பது குறித்து அப்போலோ மருத்துவமனை தரப்பில் ஆறுமுகசாமி ஆணையத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் சிகிச்சை பெற்ற போதும் பதிவான சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்க அப்போலோ  மருத்துவமனைக்கு கடந்த 6ஆம் தேதி ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு கடந்த 11ஆம் தேதி அப்போலோ தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. அதில், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது கைவசம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த விளக்கத்தில், “அப்போலோ மருத்துவமனையில் உள்ள சிசிடிவி சர்வர்களில் ஒருமாதம் முதல் 45 நாட்கள் மட்டுமே வீடியோ பதிவை சேமிக்க முடியும். புதிதாக பதிவுகள் சேமிக்கப்படும் போது பழைய பதிவுகள் தானாக அழிந்துவிடும். சிறப்பு ‌உத்தரவுகள் இருந்தால் மட்டும் கூடுதலான நாட்கள் வீடியோ பதிவு சேமித்து வைக்கப்படும். ஆகவே ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போது பதிவான வீடியோ பதிவுகள் இல்லை. அவற்றை தாக்கல் செய்ய இயலாது” என அப்போலோ தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். 

சிசிடிவி காட்சிகள் வேண்டும் என்பதில் ஆணையம் உறுதியாக உள்ளதால், அப்போலோ தலைமை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் விளக்கம் அளிக்க உத்தரவிட்டது. 

இந்நிலையில், அப்பல்லோ சட்டப்பிரிவு மேலாளர் மோகன்குமார் சிசிடிவி, மருத்துவ அறிக்கை தொடர்பாக  ஆறுமுகசாமி ஆணையத்தில் பிராமாண பத்திரம் தாக்கல்  செய்துள்ளார். அதில், “ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காட்சிகள் அழிந்துவிட்டது. இரண்டாம் தளத்தில் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் போது சிசிடி காட்சிகள் பதிவாவது நிறுத்தி வைக்கப்பட்டது. உளவுப்பிரிவு ஐஜி சத்தியமூர்த்தி, பாதுகாப்பு அதிகாரிகள் வீரப்பெருமாள், பெருமாள்சாமி, சுதாகர் ஆகியோர் நிறுத்திவைக்க சொன்னார்கள். மருத்துவ அறிக்கையை டாக்டர்கள், ரமேஷ்,செந்தில்,பாபு ஆப்ரகாம் மற்றும் மருத்துவ பணிகள் இயக்ககத்தின் முன்னாள் இயக்குநர் சத்தியபாமா தயார் செய்தனர்.

 தயார் செய்யப்பட்ட அறிக்கை முன்னாள் தலைமைச்செயலாளர் ராம்மோகனராவ், சுகாதாரத்துறை செயலாளருக்கு அனுப்பி. வைக்கப்படும். அதை அவர்கள் இறுதி செய்து அனுப்பியதற்கே தலைமை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் கையொப்பம் மட்டுமே போட்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close