[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்
  • BREAKING-NEWS மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா
  • BREAKING-NEWS என் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்
  • BREAKING-NEWS தென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்

ரெட் அலர்ட்டால் மக்கள் அச்சமடைய தேவையில்லை: வருவாய் நிர்வாக ஆணையர்

people-dont-worry-about-red-alert

தமிழகத்திற்கு வரும் 7-ஆம் தேதி 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைய தேவையில்லை என வருவாய் நிர்வாக அணையர் சத்தியகோபால் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வரும் 7-ஆம் தேதி தமிழகத்தில் அதீத கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள் அபாயகரமான இடங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழகத்திற்கு வரும் 7-ஆம் தேதி  'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைய தேவையில்லை என வருவாய் நிர்வாக அணையர் சத்தியகோபால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “ 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளதால் ஆபத்து இருக்கும் என மக்கள் நினைக்க வேண்டாம். அதிக, மிக அதிக கனமழைக்கு தமிழகத்தில் வாய்ப்புள்ளதை குறிக்கவே ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. 24.4 செ.மீ அதிகமான மழை பெய்யும் என்பதால் 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு தயாராக இருக்க வேண்டும்.  'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளதால் ஆபத்து இருக்கும் என மக்கள் நினைக்க வேண்டாம். அச்சமடையவும் தேவையில்லை. தமிழகத்தில் 4,399 இடங்கள் மழையால் பாதிப்பிற்குள்ளாகும் என கண்டறியப்பட்டுள்ளது. 5‌78 இடங்கள் மிக அதிகமாக பாதிக்கப்படும். 873 இடங்கள் அதிகம் பாதிக்கப்படும். 5‌78 இடங்கள் மிக அதிகமாக பாதிக்கப்படும், 873 இடங்கள் அதிகம் பாதிக்கப்படும். மாவட்ட ஆட்சியர்கள் 7-ஆம் தேதி முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்படும் இடங்களை கண்காணிக்க 692 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கையாக நிவாரணக் குழுக்கள் முகாமிட்டு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 30,579 தன்னார்வலர்கள் நிவாரணக்குழுக்களில் உள்ளனர்” என தெரிவித்தார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close