[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தால் குண்டர் சட்டம்

goondas-act-covers-sand-offenders-says-tamilnadu-government

மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யலாம் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி ஓட்டுநர் பாபு என்பவர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடத்தல் மணல் என்று தெரியாமல் பாபு லாரியை ஓட்டியதால் அவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியன், எஸ்.ராமதிலகம் அடங்கிய அமர்வு பாபு மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து கடந்த மே மாதம் உத்தரவிட்டனர். 

மேலும் அரசு அதிகாரிகளின் உடந்தை இல்லாமல் மணல் கடத்தல் சாத்தியம் இல்லை. அதிகாரிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு சட்டத்தில் வழிவகை இருந்தும் இதுவரை ஒரு வழக்குக் கூட பதிவு செய்யப்படவில்லை. மணல் கடத்தல் வழக்கில் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பிருந்தால் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கு பதிலளித்த தமிழக அரசு  மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசாணை டிஜிபி மூலம் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது எனத் தெரிவித்தது. இதனையடுத்து நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close