[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

செவிலியர்கள் தலைமையில் 10,00‌0 மருத்துவமனைகள்..?

10-000-hospitals-headed-by-nurses

மாநிலம் முழுவதும் செவிலியர்கள் தலைமையில் இயங்கும் 10,000 மருத்துவமனைகளை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவ காப்பீடு திட்டத்தின் ஒரு பகுதியாக 2022-ஆம் ஆண்டுக்குள் மாநிலம் முழுவதும் செவிலியர்கள் தலைமையில் இயங்கும் 10,000 மருத்துவமனைகளை  அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. நீரிழிவு நோய், மன அழுத்தம், இதயம் தொடர்பான பிரச்னைகள், புற்றுநோய் உள்ளிட்டவைகளை முன் கூட்டியே கண்டறியும் நோக்கில் இவை அமைக்கப்படுகின்றன.

செவிலியர்கள் தலைமையில் இயங்கும் இந்த மருத்துவமனைகளில் ரத்த அழுத்தம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு உள்ளிட்ட சோதனைகளை மக்கள் இலவசமாக செய்து கொள்ளலாம். மருந்துகளை வாங்க அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய தேவையில்லை, மருத்துவர் பரிந்துரைப்படி இந்த மருத்துவமனைகளிலேயே வாங்கி கொள்ளலாம்.

இங்கிருக்கும் செவிலியர்கள் சோதனைகளின் தரவுகளை சேமித்து, தீவிர நோய் தாக்குதல் இருந்தால் அவர்கள் குறித்து அரசு மருத்துவமனைக்கு தகவல் அளித்துவிடுவர். ஏற்கனவே கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் 3 இடங்களில் இத்தகைய மருத்துவமையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அரசு மருத்துவமனைகளை நாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close