[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்
  • BREAKING-NEWS இந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு

கேஸ் கட்டரை பயன்படுத்தி வங்கிக்கொள்ளை முயற்சி - சென்னையில் பரபரப்பு

chennai-bank-robbery-attempt-cctv-shows-culprits

சென்னையில் உள்ள தனியார் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, ராமாபுரத்தில் உள்ள டிரங்க் சாலையில் தனியார் வங்கியும், அதன் ஏ.டிஎம்.மும் உள்ளது. அதிகாலை 3 மணியளவில் வங்கிக்குள் சிலர் நுழைய முயல்வதை மும்பை தலைமையகத்தில் உள்ளவர்கள், கண்காணிப்புக் கேமரா மூலம் பார்த்துள்ளனர். இதுகுறித்து காவல்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக ராயலாநகர் காவல்துறையினர் வங்கிக்கு வந்து பார்த்தபோது, அங்கு யாரும் இல்லை. ஆனால், வங்கி அலாரத்தின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. மேலும் வங்கியின் ஜன்னலை கேஸ் கட்டர் கொண்டு உடைக்க முயன்றதும் கண்டறியப்பட்டது. 

கேஸ் சிலிண்டர் மற்றும் கட்டர் ஆகியவை வங்கிக்கு அருகில் கைப்பற்றப்பட்டுள்ளன. கைரேகைகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஏ.டி.எம்.-ல் பணம் எடுப்பவர்கள் போல் கொள்ளையர்கள் உள்ளே நுழைந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருகம்பாக்கத்தில் உள்ள வங்கி ஒன்றில் கேஸ் கட்டரை பயன்படுத்தி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close