[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்
  • BREAKING-NEWS சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்
  • BREAKING-NEWS தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்

நாயை கொன்றதாக புகார் கொடுத்த மனைவி - கணவர் கைது

wife-complaint-against-husband-for-dog

நாய் இறந்ததாக கொடுக்கப்பட்ட புகாரில் சென்னையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை, வேளச்சேரியில் உள்ள சாரதி நகரில் வசித்து வருபவர்கள் ஜெகநாத் (32) மற்றும் செல்வி (32) தம்பதியினர். வேளச்சேரியில் அழகுநிலையம் நடத்தி வந்தவர் செல்வி. அதே நிலையத்தின் கீழே இஸ்திரி கடை வைத்திருந்தவர் ஜெகநாத். இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து, அண்மையில் 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு முன்னர் செல்வி ஒரு நாயை வளர்த்து வந்துள்ளார். இதையறிந்தும் ஜெகநாத் செல்வியை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு நாய் தொந்தரவாக இருப்பதாகக்கூறி, அதை வெளியில் விட்டுவிடலாம் என ஜெகநாத் கூறியுள்ளார். ஆனால் செல்வி கடுமையாக எதிர்த்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது.

Read Also -> தங்கிலிஷ் முறையில் ட்வீட் போட்டு அசத்தும் அமெரிக்கப் பெண்..!

Read Also -> உலக நன்மைக்காக மிளகாய் வத்தல் யாகம் - ஏராளமானோர் பங்கேற்பு 

இந்நிலையில் இவர்கள் மடிப்பாக்கத்தில் புதியமனை ஒன்று வாங்கியுள்ளனர். அந்த மனைக்கு நாயை கொண்டு செல்ல வேண்டாம் என ஜெகநாத் கூறியுள்ளார். ஆனால் அதையும் மீறி செல்வி நாயை அழைத்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் செல்வியின் கழுத்தை ஜெகநாத் துணியால் நெறித்ததாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த செல்வி தனது தாயின் வீட்டிற்கு சென்றுவிட்டார். 4 நாட்களுக்குப் பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது, நாய் ஒரு ஓரத்தில் சுருண்டு கிடந்துள்ளது. அதனை செல்வி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் 4 மணி நேரத்தில் நாய் இறந்துவிட்டது. இதையடுத்து ஜெகநாத்தான் தனது நாயின் மரணத்திற்கு காரணம் என செல்வி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் ஜெகநாத்தை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : WifeHusbandDogநாய்கணவர்மனைவிகைது
Advertisement:
Advertisement:
[X] Close