[X] Close
JUST IN
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 50பேர் உயிரிழந்ததாக தகவல்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு
  • BREAKING-NEWS டெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...
  • BREAKING-NEWS வழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு
  • BREAKING-NEWS சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை

“சிகிச்சை என சொல்லி டாக்டர் அத்துமீறினார்”..மனக் குமுறலை கொட்டிய இளம்பெண்..!

chennai-hospital-protecting-doctor-who-molested-man-woman-notice-to-hospital

சிகிச்சை என சொல்லிவிட்டு தன்னிடம் மருத்துவர் ஒருவர் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துக் கொண்டார் எனக்கூறி சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு எதிராக இளம்பெண் ஒருவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சென்னையை சேர்ந்தவர் சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 23 வயதான இவர் டெல்லியில் வேலை பார்த்து வந்தார். இதனிடையே சுதா அடிக்கடி உடல்வலி மற்றும் தலைவலியால் அவதிப்பட்டுள்ளார். இதனால் சொந்த ஊரில் சென்று சிகிச்சை பெறலாம் என நினைத்து சென்னைக்கு திரும்பினார். அதன்படி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி இரவு 9 மற்றும் 11 மணியளவில் சுதாவிற்கு ரத்தம் மற்றும் உடல்சோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஹெச்டியூ வார்டில் சுதா அனுமதிக்கப்பட்டிருந்தால் அங்கு சுதாவை தவிர யாருக்கும் அனுமதி இல்லை. சோதனைகள் முடிந்துவிட்டது. தூங்கலாம் என சுதா நினைத்தபோது ஒரு ஆண் மருத்துவர் நர்ஸ் உடன் சுதா அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்குள் வந்துள்ளார். பின்னர் நர்ஸ் வெளியே சென்றதும், திரைக் கதவை மூடிய அவர் சுதாவை சோதனை செய்துள்ளார்.

மற்ற சோதனைகள் எல்லாம் சுமார் 3 நிமிடம் நடக்க இவர் மட்டும் சுதாவை 15 நிமிடம் வரை சோதனை செய்திருக்கிறார். சுதாவின் பிறப்புறுப்பு மற்றும் பின்பக்கத்தையும் அந்த டாக்கர் தொட்டு அத்துமீறி நடந்துள்ளார். சுதாவால் அலறவும் முடியவில்லை. ஜீரணிக்கவும் முடியவில்லை. பின்னர் வருத்தம் தெரிவித்துவிட்டு டாக்கர் சென்றுவிட்டார்.

டாக்டர் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதை புரிந்து கொண்டார் சுதா. உடனடியாக கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரியிடம் சுதா புகார் அளித்தார். சுதாவின் அம்மாவும் எழுத்துப்பூர்வ புகார் கடிதத்தை மருத்துவமனையிடம் கொடுத்துள்ளார். அவர்களும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக சோதனையின் போது பெண் செவிலியர் இல்லாததை சுதா புகாரில் குறிப்பிட்டு தெரிவித்துள்ளார். இதனிடையே சுதாவின் சகோதரி மருத்துவமனையில் தங்குமிடம் சரியில்லை என தெரிவித்ததால் நீங்கள் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுக்கலாம் எனக் கூறி அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனிடையே சுதாவின் அப்பா இதுகுறித்து மருத்துவமனையிடம் முறையிட்ட போது, சம்பந்தப்பட்ட மருத்துவரை விடுப்பில் செல்ல அறிவுறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புகார் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டதா.. என்ன விசாரணை மேற்கொண்டீர்கள் என்பது குறித்து சுதா அறிக்கை கேட்டும் அதற்கு மருத்துவமனை கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனிடையே சுதாவின் வழக்கறிஞர் சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது விசாரணை நடத்தப்பட்டதா..? என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து அறிக்கை அளிக்க அந்த தனியார் மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இந்திய மருத்துவ சங்கத்திற்கு சுதாவின் அப்பாவும் கடிதம் எழுதியுள்ளார். இருப்பினும் அந்த மருத்துவமனை இன்னும் சுதாவின் நோட்டீசுக்கு விளக்கம் அளிக்கவில்லை.

Courtesy: TheNewsMinute

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close