[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

அமைதியாக பணியாற்றும் காவல்துறையினர் - முதலமைச்சர் பாராட்டு

tamilnadu-cm-palanisamy-encourage-tn-police

பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானாலும் அமைதியுடன் பணியாற்றி வருகின்றனர் என தமிழகக் காவல்துறையினரை முதலமைச்சர் பழனிசாமி பாராட்டியுள்ளார். 

காவலர்களுக்கான நிறைவாழ்வு பயிற்சி தொடக்க விழா முதலமைச்சர் பழனிசாமி தலைமையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார்,‌ எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. அன்பழகன் உள்ளிட்டோரும், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், காவல்துறை இயக்குநர் ராஜேந்திரன், பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். 

அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதோடு, குற்றங்கள் நடைபெறாமல் தடுத்தல், பாதுகாப்பு அளித்தல், இயற்கை பேரிடர்களைச் சமாளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும், காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். இருப்பினும் சில நேரங்களில் விமர்சனங்களுக்குள்ளாகி வருவதை அரசும் மக்களும் கவனித்துக் கொண்டு இருப்பதாக தெரிவித்தார். சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது காவல்துறையினர் மனித நேயத்துடன் பணிபுரிந்ததையும் அவர் பாராட்டினார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close