[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.29 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
  • BREAKING-NEWS ரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
  • BREAKING-NEWS 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS மோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி

புழல் ‘சொகுசு’ சிறை : கைதிகளிடமிருந்து செண்ட், டிவி, ஸ்டவ், பிரியாணி அரிசி பறிமுதல்

tv-s-perfume-briyani-rice-was-confiscated-in-puzhal-prison

புழல் சிறையில் கைதிகளிடமிருந்து டிவி, வாசனை செண்ட், டிவி, பிரியாணி அரிசி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புழல் சிறையின் முதல் வகுப்பில் உள்ள கைதிகள் உல்லாச வாழ்க்கை வாழ்வதாகா குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு சிறை அதிகாரிகள் இந்த வசதிகளை ஏற்படுத்தி தருவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து புழல் சிறையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு, செல்போன்கள் மற்றும் டிவி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் சிறைத்துறை ஏடிஜிபி உத்தரவின் பேரில், புழல் சிறையிலிருந்து 17 வார்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதுமட்டுமின்றி உழல், பாளையங்கோட்டை, கடலூர், சேலம், கோவை உள்ளிட்ட சிறைகளின் அதிகாரிகளும் அதிரடியாக இடமாற்றம் அடைந்தனர். 

இந்நிலையில் புழல் சிறை எஸ்பி ருக்மணி தலைமையில், நேற்று உயர்மட்ட பாதுகாப்பு பிரிவில் இருக்கும் கைதிகளின் அறைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் கைதிகளின் அறையிலிருந்த டிவிக்கள், வாசனை செண்ட், மின் அடுப்புகள், பிரியாணி அரிசி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close