[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

காதலன் காந்தியின் தற்கொலைக்கு நான் காரணமல்ல ! - நடிகை நிலானி

serial-actress-nilani-says-that-she-is-not-be-blamed-for-her-lover-s-suicide

காதலன் காந்தியின் தற்கொலைக்கு நான் காரணமல்ல என சின்னத்திரை நடிகை நிலானி விளக்கமளித்துள்ளார்.சின்னத்திரை நடிகை நிலானி. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து, போலீஸ் சீருடையில் போலீசாருக்கு எதிரான கருத்துகளை கூறினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான புகாரில் வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர், தொடர்களில் நடித்து வருகிறார்.

Read Also -> கண்கலங்க வைத்த புகைப்படம்... குவியும் நிதியுதவி 

இந்நிலையில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த காந்தி என்பவரை நிலானி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி நிலானியை காந்தி வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக படப்பிடிப்பில் அவர் தகராறு செய்ததாகவும் தெரிகிறது.  இதையடுத்து நடிகை நிலானி, மயிலாப்பூர் காவல் நிலையத்தில், காந்தி தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி தகராறு செய்வதாக புகார் அளித்தார். இதனால் மனமுடைந்த கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து, மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் காந்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

Read Also -> கால்வாயில் மீட்கப்பட்ட ஆண் குழந்தை அமைச்சரிடம் ஒப்படைப்பு

இந்நிலையில் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்த நிலானி மனு ஒன்றி அளித்துள்ளார், அதில் " காதலன் காந்தி என்கிற லலித்குமாரின் தற்கொலைக்கு நான் காரணமல்ல. காதலன் காந்தியை திருமணம் செய்ய நினைத்திருந்தேன். குடிபழக்கத்துக்கு அடிமையாகி இருந்த காந்தி என்னிடம் நிறைய பணத்தை வாங்கியதால், அவரிடம் இருந்து ஒதுங்கியிருந்தேன். நானும், காந்தியும் சேர்ந்து இருந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வேண்டுமென்றே பரப்பபடுகின்றன. இதனால் சமூகவலைத்தளங்களில் என் புகைப்படங்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என புகார் மனுவில் தெரிவித்துள்ளார். 
   

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close