[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு

சென்னையில் ஒரே பாணியில் நான்கு கொள்ளை

four-robberies-in-same-style-in-chennai

சென்னை அயனாவரம் காசி விஸ்வநாதன் கோவில் தெருவைச் சேர்ந்த மருத்துவர் யோகேஷ்வரி தனது காரை எழும்பூர் வேனல்ஸ் சாலையோரம் நிறுத்திவிட்டு நண்பரை பார்க்க சென்றார். திரும்ப வந்து பார்த்த போது காரின் இடது, முன் பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு 10 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டிருந்தது. இது குறித்து எழும்பூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை போரூரை சேர்ந்த சிங்காரவேலன் குடும்பத்துடன் வடபழனி முருகன் கோவிலுக்கு காரில் வந்தார். கோவில் அருகே நிறுத்தப்பட்டிருந்த அவரது காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு விலை உயர்ந்த லேப்டாப், ஹார்டு டிஸ்க் திருடப்பட்டுள்ளது. அதே போல் வடபழனியில் ராமச்சந்திரன் என்பவரின் கார் கண்ணாடியை உடைத்து 30 ஆயிரம் ரூபாய் பணம், லேப்டாப் திருடப்பட்டுள்ளது. மேலும் அண்ணாநகர் வீட்டு வசதி வாரிய அலுவலக வளாகத்தில் பஞ்சாட்சரம் என்பவரின் கார் கண்ணாடியை உடைத்து பேட்டரி, ஸ்பீக்கர் திருடப்பட்டுள்ளது. இந்த 4 சம்பவங்களிலும் ஒரே நபர் ஈடுபட்டிருக்க வாய்ப்பு உள்ளது என்பதால், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Also -> ஹெச்.ராஜா 4 வாரத்தில் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close