[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS திமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS திமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS சென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு
  • BREAKING-NEWS சென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம்; மத்தியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம் - காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

பள்ளிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை 

the-tamil-nadu-school-education-department-has-ordered-to-ban-plastics-in-schools

பிளாஸ்டிக் இல்லாத சூழலை உருவாக்க வேண்டும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு இல்லாத பகுதியாக பள்ளிகளை அறிவித்து பள்ளிக்‌கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தி‌ல் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளிகளை பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு இல்லாத பகுதிகளாக அறிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படக்கூடிய தீமைகளை தடுப்பதற்காக மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்து‌ம் வகையில் பிளாஸ்டிக் இல்லாத சுற்றுச்சூழலை வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகத்தில் உருவாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Also -> சென்னையில் ஒரே பாணியில் நான்கு கொள்ளை  

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close