[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கஜா புயல் எச்சரிக்கையை தொடர்ந்து தஞ்சையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சிய
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

7 பேர் விடுதலை விவகாரம்: ஆளுநர் மாளிகை விளக்கம்!

governor-didn-t-send-report-to-union-home-ministry

ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் மத்திய உள்துறைக்கு அறிக்கை அனுப்பவில்லை என்று ஆளுநர் மாளிகை மறுப்புத் தெரிவித்துள்ளது. 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் விஷயத்தில் கவர்னருக்கு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, 7 பேரை யும் விடுதலை செய்வது குறித்து கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அந்த பரிந்துரை மீது கவர்னர் காலம் தாழ்த்தாமல் முடிவெ டுக்க வேண்டும் என பல்வேறு கட்சியினரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சிறையில் உள்ள அந்த 7 பேரையும் விடுவிப்பது தொடர்பான அமைச்சரவை பரிந்துரை மற்றும் பேரறிவாளன் கருணை மீது கருத்து தெரிவிக்குமாறு தமிழக ஆளூநர் பன்வாரிலால் புரோகித், மத்திய உள்துறை அமைச்சகத்தை கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை, மத்திய உள்துறைக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதை ஆளுநர் மாளிகை இன்று மறுத்துள்ளது.

ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ராஜிவ் வழக்கு மிகவும் சிக்கலான ஒன்று. விடுதலை தொடர்பாக சட்ட, அரசியல் சாசன, நிர்வாக ரீதியிலான ஆய்வுகள் தேவை. விடுதலை செய்யக் கோரிய பரிந்துரையோடு  மாநில அரசு சார்பில் அதிக அளவில் ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளன. உரிய கவனம் கொடுக்கப்பட்டு சரியான முடிவெடுக்கப்படும். தேவைப்படும் பட்சத்தில் ஆலோசனை மேற்கொள்ளப் படும். அரசியல் சாசனத்தை பின்பற்றி பாரபட்சமில்லாத முடிவெடுக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.  

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close