[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் சந்திக்கவுள்ள மாமல்லபுரத்தில் சீன அதிகாரிகள் ஆய்வு
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் தேடப்பட்டு வரும் மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் மனு
  • BREAKING-NEWS சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு. பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம்.
  • BREAKING-NEWS 7 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி

எட்டுவழிச்சாலை - நிலம் கையகப்படுத்தும் பணி தற்காலிக நிறுத்தம்

chennai-salem-8-way-road-works-stopped-2-weeks

சென்னை - சேலம் இடையேயான எட்டுவழிச்சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் 2 வார காலத்திற்கு நிறுத்தி வைக்கப்படுவதாக உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. திட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்காக மத்திய அரசு பரிசீலித்து வருவதால் இது போன்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

திட்டத்தை மேற்கொள்வது தொடர்பாக சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படாத நிலையில் , மரங்களை மத்திய அரசு சார்பில் வெட்டவில்லை என்றும் தனிநபர்கள் அரசின் பெயரை பயன்படுத்தி இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் , மரங்களை வெட்டிய புகாரில் சில நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

முன்னதாக எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு தடை கோரியும் , நிலம் கையகப்படுத்த தடை கோரியும் விவசாயிகள் மற்றும் தனிநபர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு இன்று நீதிபதி சிவஞானம் அமர்வில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மரம் வெட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கு வரும் 20-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

Read Also -> திமுகவின் முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலு தேர்வு

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close