[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை

8 வழிச்சாலையை 6 வழி சாலையாக மாற்ற திட்டம் 

chennai-salem-8-ways-green-highway-has-been-changed-into-6-ways

சென்னை -சேலம் 8 வழி நெடுஞ்சாலையை 6 வழிச் சாலையாக மாற்ற சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிக்கை தாக்கல்.

Read Also -> சூடுபிடித்த பின்னலாடை வர்த்தகம் : ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமான ரூபாய் சரிவு

சென்னை சேலம் எட்டுவழி சாலைக்கு தொடக்கம் முதலே பொது மக்கள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்பை குறைக்க மாற்றம் எடுத்துள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை-சேலம் இடையேயான பசுமை 8 வழிச்சாலை திட்டம் முதல்கட்டமாக 6 வழிச்சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டிருப்பதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக 8 வழிச்சாலை திட்டத்தில் சில மாற்றங்களை செய்து, மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிக்கை அனுப்பியுள்ளது.  

Read Also -> யார் 100-ஐ தொடுவது ? போட்டியில் ரூபாயும், பெட்ரோலும்

அந்த அறிக்கையில் 8 வழிச்சாலை திட்டத்துக்கு முதலில் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. தற்போது அதிகாரிகள் மேற்கொண்ட களப்பணி காரணமாக திட்ட மதிப்பீட்டு தொகையானது 7 ஆயிரத்து 210 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 300 ஏக்கரில் வனப்பகுதி கைப்பற்றப்படுவதாக இருந்த நிலையில் அவை தற்போது 103 ஏக்கராக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் 90 மீட்டர் அகலத்திற்கு மதிப்பீடு செய்யப்பட்டிருந்த 8 வழிச்சாலை திட்டமானது தற்போது 70 மீட்டர் அகல சாலையாக மாற்றப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Read Also -> தீப்பிடித்து ஒரு வயது குழந்தை உள்பட 4 பேர் பலி.. கொலையா..? தற்கொலையா..?

இதனைதொடர்ந்து சாலையின் மொத்த தூரமான 277 கிலோ மீட்டரில் எவ்வித மாற்றமும் இல்லாத நிலையில், வனப்பகுதியில் 13.2 கிலோ மீட்டருக்கு பதில் 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை மாற்றி அமைக்கப்படவுள்ளது. வனப்பகுதியில் 50 மீட்டர் அகலமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2 ஆயிரத்து 560 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவை தற்போது ஆயிரத்த 900 ஹெக்டேராக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சில இடங்களில் அமைக்கப்பட இருந்த 8 வழிச்சாலையை, 6 வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read Also -> “ஸ்டாலின் கைக் காட்டுபவரே அடுத்த பிரதமர்” - துரைமுருகன்

இந்த சாலையானது முதற்கட்டமாக ஆறு வழிச் சாலையாக மட்டுமே அமைக்கப்படும் என்றும், மேலும் எதிர்காலத்தில் வாகனப் பெருக்கத்தை கணக்கில்கொண்டு 8வழிச் சாலையாக மாற்றம் செய்ய வாய்ப்புள்ளதாக திருத்தப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் கல்வராயன் மலை பாதிக்காதபடி செங்கம் முதல் சேலம் சாலை வழி மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு முன்பே கூறியிருந்தது.அதனால் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்ட பாதை இல்லாமல் வேறு மூன்று பாதைகளை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 163 கி.மீ கொண்ட செங்கம் - மூங்கில்கோட்டை - தர்மபுரி வழியாக சேலத்தை அடைவது. 154 கி.மீ கொண்ட செங்கம் - அரூர்- தர்மபுரி வழியாக சேலத்தை அடைவது. 121 கி.மீ கொண்ட செங்கம் - அரூர் - தீவுட்டிபட்டி வழியாக சேலத்தை அடைவது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close