[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS ஆதார் செல்லுமா ? செல்லாதா ? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்

8 வழிச்சாலைக்கு நிரந்தர தடைவிதிக்க நேரிடும் - நீதிமன்றம் எச்சரிக்கை

chennai-high-court-waring-about-8-way-road

8 வழிச்சாலை திட்டத்திற்காக மரங்களை வெட்டக்கூடது என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

சேலம் 8 வழி பசுமைவழி சாலை திட்டம் சென்னையிலிருந்து காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்கள் வழியே அமைக்கப்படுகிறது. இதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதேசமயம் இந்த திட்டத்தை எதிர்த்து வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 8 வழிச்சாலை திட்டத்துக்காக மரங்களை வெட்டக்கூடாது என எச்சரித்தனர். மரங்களை வெட்டாக்கூடாது என்ற உத்தரவை மீறும் வகையில் பட்டா நிலங்களை, சாலைக்குள் வரும் அரசு நிலங்களாக மாற்றினால் 8 வழி சாலை திட்டம் முழுமைக்கும் தடை விதிக்க நேரிடும் என்றனர். 

அத்துடன் மரங்கள் வெட்டப்படுவது எந்த சூழ்நிலையில் உள்ளது. சமூக பாதிப்பு எந்த அளவில் உள்ளது ?  என கேள்விகள் எழுப்பினர். 100க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டதாக கூறப்பட்ட புகாருக்கு, மரங்களை வெட்டுவதா? எனக் கண்டனம் தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக அரசு சார்பில் அறிக்கை தக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close