[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் பெரம்பலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் வேட்புமனு தாக்கல்
  • BREAKING-NEWS தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாதிகள் பயன்படுத்தியது 'விர்ச்சுவல் சிம் கார்டு'-தீவிரமடையும் விசாரணை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.67 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை

பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்படுவது எப்படி ?

procedure-to-fix-petrol-price-in-india-know-the-facts

பெட்ரோல் , டீசல் விலை இன்னும் சில நாட்களில் ரூ.100 ஐ தொட்டு விடும் நிலையில் உள்ளது. சில இடங்களில் பெட்ரோல் ரூ.90க்கு விற்கப்படுகிறது , தமிழகத்தில் ரூ84க்கு விற்கப்படுகிறது. தினமும் பெட்ரோல் விலை ஏறினாலும் அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை. அமைச்சரும் டாலர் மதிப்பு உயர்வதால் பெட்ரோல் விலை உயர்கிறது என கூறினார். இதிலிருந்து ரூபாய் மதிப்பு மீளும் வரை எந்த நடவடிக்கையும் இருக்க போவதில்லை என தெரிகிறது.

Read Also -> தன்பாலின உறவுக்கு எதிராக மத போதகர் ஆர்ப்பாட்டம் 

பெட்ரோல் விலை நிர்ணயம் எப்படி செய்யப்படுகிறது

நிலை 1 : கச்சா எண்ணெய் விலை எவ்வளவு என்பதே அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கிறது. ஒரு பேரல் விலை / பேரலில் இருந்து கிடைக்கும் பெட்ரோல் விலை கொண்டே நிர்ணயம் செய்யப்படுகிறது. 


நிலை 2 : சுத்திகரிப்பு - கச்சா எண்ணெயை அப்படியே பயன்படுத்த முடியாது. அதனை சுத்திகரிப்பு செய்து உப பொருளான பெட்ரோல், டீசல், தார் போன்றவை பெறப்படுகிறது. இதற்கு ஆகும் செலவும் சேர்க்கப்படுகிறது

நிலை 3 : கலால் வரி ( மத்திய அரசு வரி ) கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான செலவு மற்றும் போக்குவரத்து செல்வை ஈடு கட்டுவதற்காக கலால் வரி விதிக்கப்படுகிறது. 

நிலை 4 : டீலர் கமிஷன் ( முகவர் தரகு விலை) - வாங்குவதற்கும் விற்பதற்குமான விலையில் செய்யப்படும் மாற்றம்  ; ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் ரூ3 வரையில் டீலர் கமிஷன் இருக்கும் 

நிலை 5 : வாட் வரி - மதிப்பு கூட்டு வரி - மாநில அரசின் சார்பில் விதிக்கப்படும் வரி 

Read Also -> 'அண்ணன் தம்பிகள் இணைய வேண்டும்' மதுரை ஆதினம்  


எடுத்துக்காட்டாக கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு எல்லாம் செய்யப்பட்டு பெட்ரோலாக மாற்றிய பின்னர் அதன் விலை ரூ.37 , அதில் சேர்க்கப்படும் கலால் வரி ரூ.19 , டீலர் கமிஷம் ரூ3, மாநில அரசின் வாட் 16. மொத்தம் ரூ.75 ; இப்போது தினசரி மாற்றம் செய்யப்படுவதால் விலையில் தொடர்ந்து மாற்றம் இருந்து கொண்டே இருக்கிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close