முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது.
ராஜிவ் காந்தி கொலைவழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரின் முன்விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 4 மணியளவில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் 7 பேரின் முன்விடுதலை குறித்து ஆளுநருக்கு பரிந்துரைப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Read Also -> ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை - நாளை முழு அடைப்பு போராட்டம்
ராஜீவ் கொலையாளிகள் ஏழு பேரையும் விடுவிப்பது தொடர்பாக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த தீர்மானத்தை ஆளுநர் பரிசீலித்து முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. சட்டத்துக்கு எதிரான வகையில் குற்றம் இழைக்கும் குற்றவாளிகளின் தண்டனையை தள்ளுபடி செய்யவோ, ரத்து செய்யவோ 161 சட்டப்பிரிவின் படி ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.
அதனால், தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஏழு பேரையும் விடுவிக்க உத்தரவிடலாம். அப்படியில்லையென்றால், தனது முடிவினை கிடப்பில் போடலாம். ஏழு பேர் விடுதலை குறித்த தமிழக அரசின் பரிந்துரையை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கலாம். ஆனால், அனைத்து ஆளுநரின் சுதந்திரமான முடிவுக்கு உட்பட்டது. தனது அதிகாரத்தை ஆளுநர் பன்வாரிலால் எப்படி கையாளப் போகிறார் என்பதில்தான் எதிர்பார்ப்பு உள்ளது.
Read Also -> “கடைசி காலத்திலாவது மகனுடன் இருக்க ஏழை தாய் விரும்புகிறேன்” - ரவிசந்திரன் தாயார் உருக்கம்
என்ன சொல்கிறது பிரிவு 161 !
தமிழக அரசுக்கே அதிகாரம் என்ற குழப்பம் ஏன் ?
ஜெயலலிதா ஏன் பிரிவு 161-ஐ பயன்படுத்தவில்லை
இம்ரான் கானின் புல்வாமா தாக்குதல் கருத்திற்கு இந்தியா பதிலடி
மேஜரின் இறுதி ஊர்வலத்தில் ‘ஐ லவ் யூ’ எனக் கதறி அழுத மனைவி
மதுரை விமான நிலையத்தில் ஏழு லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
“ஜெயலலிதா ஆன்மாவிற்கு எதிரான கூட்டணி” - அதிமுகவை விமர்சித்த கருணாஸ்
“கூட்டணி மட்டும் முக்கியமல்ல; நட்பும் முக்கியம்” - விஜயகாந்த் சந்திப்பு பற்றி பியூஷ்
15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக ! என்ன சொல்கிறது வரலாறு ?
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புல்வாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?