[X] Close
JUST IN
 • BREAKING-NEWS இருசக்கர வாகனத்தை ஓட்டுபவருடன் பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்- உயர்நீதிமன்றம்
 • BREAKING-NEWS ஹெல்மெட் கட்டாயம் என்பதை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
 • BREAKING-NEWS இருசக்கர வாகனங்களை விற்கும் நிறுவனங்களே ஹெல்மெட்டையும் இலவசமாக வழங்க வேண்டும்- தமிழிசை சவுந்தரராஜன்
 • BREAKING-NEWS வாகன ஆய்வாளர் வங்கி லாக்கரில் 9.5 கிலோ தங்கம் பறிமுதல்
 • BREAKING-NEWS சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
 • BREAKING-NEWS சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
 • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி

ஏழு பேர் விடுதலையில் ஆளுநர் அதிகாரம் - என்ன சொல்கிறது பிரிவு 161 !

governor-power-on-rajiv-gandhi-killers-release

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. 

ராஜிவ் காந்தி கொலைவழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரின் முன்விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுந‌ருக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 4 மணியளவில் நடைபெ‌றும் அமைச்சரவைக் கூட்‌டத்தில் 7 பேரின் முன்விடுதலை குறித்து ஆளுநருக்கு பரிந்துரைப்பது குறித்து ஆலோ‌சிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Read Also -> ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை - நாளை முழு அடைப்பு போராட்டம்  

     

ராஜீவ் கொலையாளிகள் ஏழு பேரையும் விடுவிப்பது தொடர்பாக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த தீர்மானத்தை ஆளுநர் பரிசீலித்து முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. சட்டத்துக்கு எதிரான வகையில் குற்றம் இழைக்கும் குற்றவாளிகளின் தண்டனையை தள்ளுபடி செய்யவோ, ரத்து செய்யவோ 161 சட்டப்பிரிவின் படி ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.

அதனால், தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஏழு பேரையும் விடுவிக்க உத்தரவிடலாம். அப்படியில்லையென்றால், தனது முடிவினை கிடப்பில் போடலாம். ஏழு பேர் விடுதலை குறித்த தமிழக அரசின் பரிந்துரையை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கலாம். ஆனால், அனைத்து ஆளுநரின் சுதந்திரமான முடிவுக்கு உட்பட்டது. தனது அதிகாரத்தை ஆளுநர் பன்வாரிலால் எப்படி கையாளப் போகிறார் என்பதில்தான் எதிர்பார்ப்பு உள்ளது.

Read Also -> “கடைசி காலத்திலாவது மகனுடன் இருக்க ஏழை தாய் விரும்புகிறேன்” - ரவிசந்திரன் தாயார் உருக்கம் 

       

என்ன சொல்கிறது பிரிவு 161 !

 • குற்றவாளிகள் கருணை மனு கொடுக்கும் போது அதனை பரிசீலித்து தண்டனை குறைப்பு செய்ய ஆளுநருக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரமே பிரிவு 161
 • எந்தவித தண்டனை பெற்றாலும் , குற்றவாளி கருணை மனு கொடுத்தால் ஆளுநர் பரிசீலிக்கலாம்
 • கருணை மனுவை ஏற்கவும் நிராகரிக்கவும் ஆளுநருக்கு முழு உரிமை உண்டு 
 • பேரறிவாளனும் இதனை பயன்படுத்தியே 2015 டிசம்பர் 30-ம் தேதி மனு கொடுத்தார்
 • சமீபத்தில் உச்சநீதிமன்றம் பேரறிவாளன் மனுவை பிரிவு 161ஐ பயன்படுத்தி ஆளுநர் முடிவு செய்யலாம் என விளக்கமளித்தது
 • ஆளுநரே கேட்கும் வரையில் மாநில அரசு சார்பில் கருணை மனு மீது கருத்து சொல்வது அவசியமற்றது ; ஆனால் தீர்மானங்கள் போட்டு அனுப்ப தடையேதும் இல்லை. 

தமிழக அரசுக்கே அதிகாரம் என்ற குழப்பம் ஏன் ?

 • உச்சநீதிமன்றம் ஆளுநரே முடிவெடுக்கலாம் என சொன்னது ; நளினியின் தூக்கு தண்டனையை (2000-ஆண்டில்) ஆயுளாக ஆளுநரே குறைத்தார் என்பதால் இங்கும் அது சாத்தியம் என்ற வாதம் உண்டானது. 
 • நளினியை விடுதலை செய்ய தமிழகம் கோரவில்லை, தண்டனை குறைப்பு கேட்டது, தண்டனை குறைப்புக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை
 • பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க கூடாது என்பது தற்போதைய மத்திய அரசின் நிலைப்பாடு ; மத்திய அரசுக்கு எதிராக அவர்களின் பிரதிநிதி நடவடிக்கை எடுப்பாரா ? 

ஜெயலலிதா ஏன் பிரிவு 161-ஐ பயன்படுத்தவில்லை

         

 • ராஜிவ் குற்றவாளிகள் தூக்கு ஆயுளாக குறைக்கப்பட்ட போது, விடுதலை குறித்து மாநில அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியது
 • மாநில அரசின் முன் IPC 435 மற்றும் Article 161 ஆகியவை வாய்ப்பாக இருந்தன
 • IPC 435 ஐ ஜெயலலிதா தேர்ந்தெடுத்தார். ஏனெனில் அது மாநில அரசுக்கான அதிகாரம். பிரிவு 161 என்பது ஆளுநருக்கான அதிகாரம். என்னதான் சொன்னாலும் ஆளுநர் மத்திய அரசை கேட்பார் என்ற எண்ணம். 
 • ராஜிவ் குற்றவாளிகள் மேல் வழக்குகள் இருந்தாலும், மத்திய அரசு வழக்குகளுக்கான தண்டனை காலத்தை அவர்கள் அனுபவித்திருந்தனர். மீதி தண்டனைக் காலம் மாநில அரச் சட்டங்களுக்குள் இருந்தன. அதானால் குற்றவாளிகளை விடுவிக்க மாநில அரசின் அதிகாரம் IPC 435 மூலம் மத்திய அரசின் ஆலோசனை மட்டும் பெற்றும் விடுவிக்க முடியும் என ஜெயா நம்பினார். 
 • வழக்கை முழுவதுமாக சிபிஐ விசாரித்ததால் மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் விடுவிக்க முடியாது என மத்திய அரசு மறுக்க, உச்சநீதிமன்றம் அதனை உறுதி செய்தது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close