[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் அமலுக்கு வந்தது புதிய சொத்து வரி!
  • BREAKING-NEWS காஞ்சிபுரத்தில் கனமழையால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்- விவசாயிகள் வேதனை
  • BREAKING-NEWS மணல் கடத்தலையும், அதில் நேர்மையான அதிகாரிகள் கொல்லப்படுவதையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது- சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் ரகசியமாக நடைபெறும் குட்கா விற்பனை- அதிரடி காட்டிய போலீஸ்!
  • BREAKING-NEWS சென்னையில் விடிய விடிய கனமழை

அழகிரியின் அமைதிப் பேரணி - ஆதங்கம் வெளிவருமா ?

mk-alagiri-came-to-karunanidhi-s-tomb-with-his-caders-and-paid-tribute-tomorrow

மெரினாவில் உள்ள கருணாநிதியின் சமாதியில் அழகிரி வேண்டிக் கொண்ட  ஆதங்கத்திற்கு கருணாநிதியின் ஆசி கிடைக்குமா? நான் கலைஞரின் மகன், சொன்னதை செய்வேன் என்று அழகிரியளித்த உறுதிமொழியும் நிறைவேறுமா? என்பதனைக் காண அழகிரியின் ஆதரவளார்கள் உள்ளிட்ட பலரும் ஆவலாக உள்ளனர்.

Read Also -> மேகதாது அணை விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!  

கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி மு.க.அழகிரி தனது குடும்பத்துடன் கருணாநிதியின் சமாதிக்கு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் கலைஞரிடம் எனது ஆதங்கத்தை வேண்டினேன், தலைவரின் உண்மையான விசுவாமிக்க உடன்பிறப்புகள் என் பக்கம் இருக்கிறார்கள், காலம் பதில் சொல்லும் என்றார். இந்த சம்பவத்திற்கு பின்பு தான் திமுக பொதுக்குழுவில் ஸ்டாலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது பலத்தை நிரூபித்து கட்சியில் சேர அழகிரி முயற்சி மேற்கொண்டு வருகிறார். 

Read Also -> தந்தை மரணம், தாய் கொலை - சிறுவனை மகனாக தத்தெடுத்த போலீஸ்

இதற்காக கருணாநிதி மறைந்த 30வது நாளில் ஒரு லட்சம் தொண்டர்களை திரட்டி சென்னை சிம்ஸ் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள  அண்ணா சிலையில் இருந்து கருணாநிதி நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடத்த திட்டமிட்டு தமிழகம் முழுவதும் இருந்து ஸ்டாலினுக்கு எதிராக உள்ள அதிருப்தியாளர்களை ஒன்று திரட்டி வருவதாக கூறப்படுகிறது.

Read Also -> 'தமிழிசை கொலை மிரட்டல் விடுத்தார்' சோபியாவின் தந்தை சாமி

இதற்கிடையில், அழகிரியின் திட்டத்தை முறியடிக்க கட்சியில் அதிருப்தியாக உள்ளவர்களை திமுக பொதுக்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளராக கொண்டுவந்தார் ஸ்டாலின். அதிருப்தியாளர்களான முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர் தங்கவேலன், தேனி மாவட்ட முன்னாள் செயலாளர் எல்.மூக்கைய்யா உள்ளிட்ட பலரை பொதுக்குழுவில் வாழ்த்துரையாற்ற வைத்தார்.  ஒருபுறம் ஸ்டாலின் அழைப்பை ஏற்று கட்சியில் இணக்கமாக இருப்பது போல் அதிருப்தியாளர்கள் காட்டிக் கொண்டாலும், மற்றொருபுறம் அழகிரியின் அமைதி பேரணிக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்கின்றனர் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெளிப்படையாக முன்வர முடியாது என்பதால், பொருளாதார ரீதியான உதவிகளும், வாகனங்களில் தங்களுடைய ஊரில் இருந்து கணிசமான அளவில் ஆட்களை அனுப்புவதாகவும் உறுதியளித்துள்ளனர் என்ற பேச்சும் அடிபடுகிறது


 
மு.க.அழகிரி தலைமையில் 5ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை அண்ணாசாலையில் இருந்து கருணாநிதி நினைவிடம் வரை அமைதி பேரணிக்கு அனுமதி கேட்டு, மதுரை மாநகர் திமுகவின் முன்னாள் அவைத் தலைவர் இசக்கி முத்து சென்னை ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். ஆனால் பேரணி நடைபெறும் அன்றைய தினத்தில் சேப்பாக்கம் பகுதியில் உள்ள கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் ஆசிரியர் தினம் நிகழ்ச்சி நடைபெறுவதால் பேரணியை மாலை 3 மணிக்கு மேல் நடத்தும்படி காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

இந்நிலையில் முதலமைச்சரின் நிகழ்ச்சி மாலை 4 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே, திரைமறைவில் அழகிரியின் பேரணிக்கு அரசு தரப்பில் ஆதரவு கொடுத்து இருப்பதாகவே காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.  வழக்கமாக, காலை 8 மணிக்குள் வெளியூரில் இருந்து வரும் ஆம்னி பேருந்துகள் பெருங்களத்தூரில் இருந்து தாம்பரம் வழியாக சென்னை மாநகரத்திற்குள் செல்ல அனுமதி உள்ளது. எனவே, வெளியூரில் இருந்து பேரணிக்கு வரும் வாகனங்கள் இன்று இரவு 8 மணிக்கு புறப்பட்டு சென்னை நோக்கி  வர அழகிரி ஆதரவாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, சொன்னதை நிறைவேற்றுவாரா? அழகிரி என்பதனை பொருத்திருந்து பார்ப்போம்...

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close