[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

“புகைப்பழக்கத்தை விடுங்கள்” புதுவாழ்வு பிறக்கட்டும்..! - ஆய்வு சொல்வதென்ன ?

tobacco-uses-in-tamil-nadu-a-survey

தமிழகத்தில் 21.1 சதவிகித‌ ஆண்கள் புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது. 

சென்னை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் மற்றும், உலக சுகாதார அமைப்பு உள்ளிட்டவை இணைந்து க்ளோபல் அடல்ட் டொபாக்கோ சர்வே (Global Adult Tobacco Survey) எனப்‌படும், புகையிலைப்பொருட்களை பயன்படுத்துவோர் குறித்த ஆய்வை மேற்கொண்டது. நாடு முழுவதும் 2009 முதல் ஆண்டுதோறும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி, தமிழகத்தில், 2016 அக்டோபர், நவம்பரில் 1371 ஆண்கள் மற்றும் 1544 பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில், தமிழகத்தில், 2009 - 10 ஆம் ஆண்டு புகையிலை பயன்படுத்துவோர் 16 புள்ளி 6 சதவிகிதமாக இருந்தது. இந்த விகிதம் அதிகரித்து 2016-17 கணக்கெடுப்பின்படி, 20 சதவிகிதமாக இருக்கிறது. 

Read Also -> எஸ்.பியான தனது மகளுக்கு சல்யூட் அடித்த துணை ஆணையர்!

கடந்த 8 ஆண்டுகளில் புகையிலைப்பொருட்களை பயன்படுத்துவோர் விகிதம் தமிழகத்தில் 3.8 சதவிகிதம் உயர்ந்துள்ளது. புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் எண்ணிக்கை 2009-10 ல் 9.6 சதவிகிதமாகவும், 2016-17ல் 10.5 சதவிகிதமாக உள்ளது. புகையற்ற புகையிலைப்பொருட்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கையை பொருத்தவரை 2009-10ல் 8.1 சதவிகிதமாகவும், 2016-17 ல் 10.6 சதவிகிதமாகவும் இருக்கிறது. தமிழகத்தில் பெண்களிடையே புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Read Also -> பார்சல் உணவுக்கு பாத்திரம் ! நடைமுறை சிக்கலில் ஹோட்டல்கள்

புகைப்பவர்கள் விடும் புகையால் பாதிக்கப்படுவோரை பொருத்தவரை அலுவலகம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது, புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் வெளியிடும் புகையை சுவாசிக்கும் மற்றவர்கள் பாதிப்புக்குள்ளாவது, அலுவலகம் போன்ற பணிபுரியும் இடங்களில் அதிகம் இருக்கிறது என ஆய்வறிக்கை கூறுகிறது. அடுத்தபடியாக வீட்டில் 11 சதவிகிதம் பேரும், பொதுப்போக்குவரத்தில் 5.8 சதவிகிதம் பேரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். திரையரங்குகளில் 4.4 சதவிகிதமும், விடுதிகளில் 3.3 சதவிகிதம் பேரும் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் எண்ணற்றவை. அதன்மூலம் ஏற்படும் நோய்கள் நம்மை வாழும்போதே நரகத்திற்கு கொண்டு செல்லும் என புகையிலையால் பாதிக்கப்பட்டர்கள் வேதனையுடம் தெரிவிக்கின்றனர். புகையிலைப் பொருட்கள் தடை செய்வது மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வாகும் என நுகர்வோர் அமைப்பினர் கூறுகின்றனர். மேலும் சிகரெட்டுக்கு பதிலாக ஈ சிகரெட் என்றழைக்கப்படும் மாற்று சிகரெட்டும், புகைபிடிப்பதற்கு இணையான தீமையை தரும் என்பதால் அதனையும் தடை செய்ய வேண்டும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close