[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட பிப்.24 முதல் விருப்பமனு விநியோகம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.02 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.25 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா
  • BREAKING-NEWS பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய ஆளுநரை சந்தித்து முதல்வர் வலியுறுத்த வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முக்கிய ஆலோசனை
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு
  • BREAKING-NEWS விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முறைகேடு.. விசாரணையில் அம்பலம்..!

protocol-breached-in-tamilnadu-organ-transplant-case-says-probe

தமிழகத்தில் நடைபெற்ற உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பல்வேறு முறைகேடு நடைபெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மூளைச் சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புக்களை தானம் பெற்று, அவற்றை ஏற்கெனவே காத்திருக்கின்ற நோயாளிகளுக்கு பொருத்த உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்கின்றனர். ஆனால் இத்தகைய செயலின் போது முறைப்படி காத்திருந்த நபர்களுக்கு தானம் பெற்ற உடல் உறுப்புகளை வழங்காமல் தங்களுக்கு தேவையான நபர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் பொருத்தி விடுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் அடிக்கடி எழுவதும் உண்டு. இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற்ற உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பல்வேறு முறைகேடு நடைபெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கடந்த மே மாதம் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே நடைபெற்ற வாகன விபத்தில் அடிபட்டு மூளைச்சாவு அடைந்தார். இதனால் மணிகண்டனின் உடலில் இருந்து அவரது உறுப்புகள் திருடப்பட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜய் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருந்தார். எனவே இதுதாடர்பாக மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார துறை விசாரணைக்கு உத்தரவிட்டது.

இதில் தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணையத்தின் விதிகளை மீறி உறுப்புகள் வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. உடல் உறுப்புக்கான தேவையில் இந்தியர்கள் காத்திருந்த போதும் இந்தியர்களுக்கு வழங்காமல் அதனை வெளிநாட்டு நபர்களுக்கு கொடுத்தது தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தானம் பெற்றவர் அறுவை சிகிச்சை முடிந்த சில மணி நேரத்திலேயே உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. இதில் தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணையத்தை சாராத சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. வேறு ஒருவருக்காக உடல் உறுப்பை பெற்றுக் கொண்டு அதனை சம்பந்தம் இல்லாத மற்றொரு நபருக்கு பொருத்திவிடுவதாகவும் கூறப்படுகிறது.

மணிகண்டன் விவகாரத்திலும் அவரது குடும்பத்தினர் முதலில் உடல் உறுப்பு தானத்திற்கு மூன்று முறை மறுப்பு தெரிவித்த நிலையில் அவர்களை பேச வைத்து தூண்டி உடல் உறுப்பு தானத்திற்கு சம்மதம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஒரு நபருக்கு பேசப்பட்டு வாங்கப்பட்ட கிட்னி வேறு நபருக்கு பொருத்தப்பட்டதும், உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒருவருக்காக இதயம் தானம் பெறப்பட்டடு அது லெபனான் நாட்டை சேர்ந்த ஒருவருக்கு பொருத்தப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் இதயம் சரியாக பொருந்தாத காரணத்தினால் அவரின் அறுவை சிகிச்சைக்கு பின் சில மணி நேரங்களிலேயே உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. இதுபோன்ற உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விஷயத்தில் தமிழக அரசின் சில மூத்த அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாக உள்ளது.

(Courtesy : The Hindu)

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close