[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

'நான் கொலை செய்யவில்லை சாத்தான்தான் கொலை செய்தது' பெண்ணின் பகீர் வாக்குமூலம்

woman-confession-with-police-after-murder

சென்னை திரு‌ல்லிக்கேணியில்‌ மந்திரவாதி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெண், தன் மீது ஏவப்பட்ட சாத்தான்தான் கொலை செய்தது என்று காவல்துறையினரிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணியில் கடந்த 27-ஆம் தேதி மந்திரவாதி சையது பஷீர் உதின் எரித்துக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஜாம்பஜாரைச் சேர்ந்த சாதிக் பாட்ஷா என்பவரின் மனைவி நவீன்தாஜ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இந்தக் கொலையின் பின்னணி தெரியவந்துள்ளது.

கைது செய்யப்படுவதற்கு முன் தான் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறி நாடகமாடிய நவீன்தாஜ், தண்டனையில் இருந்து தப்பிக்க தற்போது சாத்தானை துணைக்கு அழைத்துள்ளார். நவீன்தாஜின் கணவர் சாதிக் பாட்ஷா நடத்தி வந்த பர்னிச்சர் கடையில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் தங்களது கடையை லாபத்தில் இயங்க வைக்க மந்திரவாதி சையதை அணுகியுள்ளார் நவீன்தாஜ். அவரும் மந்திரம் ஓதி இனி கடை லாபத்தில் இயங்கும் என்று கூறியுள்ளார். அதை நம்பி வீட்டுக்கு வந்த நவீன்தாஜுக்கு லாபத்துக்கு பதில் வயிற்று வலி வந்துள்ளது. மீண்டும் சையதிடம் செல்ல, அவர் மீண்டும் மந்திரம் ஓத இந்த முறை வயிற்று வலிக்குப் பதில் கை, கால்களில் பிரச்னை வந்துள்ளது. இதுகுறித்து சையதிடம் கேட்டுள்ளார் நவீன்தாஜ். அவர் உங்கள் வீட்டில் கெட்ட சக்திகள் இருக்கின்றன. அவற்றை விரட்டிவிட்டால் தொழில் மற்றும் உடல் நிலை சரியாகிவிடும் என்று கூறியுள்ளார்.

Read Also -> விஷம் வைத்த பின்பும் குழந்தைகளின் கழுத்தை நெரித்த அபிராமி.. கணவரையும் கொல்ல பிளான்..!

இதனையடுத்து நவீன்தாஜ் வீட்டுக்கு வந்து மந்திரம் ஓதியுள்ளார் சையது. மந்திரம் ஓதுவதற்காக அடிக்கடி நவீன்தாஜ் வீட்டுக்கு சையது சென்றதாக தெரிகிறது. இதன்காரணமாக இருவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையறிந்த நவீன் தாஜின் கணவர் சாதிக் பாட்ஷா, இருவரையும் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த நவீன்தாஜ் தனது தொழில், உடல்நிலை, வாழ்வு அனைத்தும் பாழானதற்கு சையதே காரணம் என்று எண்ணியுள்ளார். அவரை பழிவாங்க முடிவு செய்த நவீன்தாஜ் பெட்ரோலை வாங்கி சிறிய வாளியில் ஊற்றி அதனை பையில் வைத்துக்கொண்டு சையது மந்திரம் ஓதும் இடத்துக்குச் சென்றுள்ளார். அங்கு மந்திரம் ஓதிக்கொண்டிருந்த சையது மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துள்ளார். அங்கிருந்து வீட்டுக்கு வந்த நவீன்தாஜ் கடும் மனஉளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.

இதனையடுத்து கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதைப் பயன்படுத்தி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று நாடகம் ஆடியுள்ளார். இவை அனைத்தும் நவீன்தாஜிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்த தகவல்கள். அடுத்தது தான் சாத்தான் என்ட்ரி. நடந்தவற்றை காவல்துறையினரிடம் கூறிவந்த நவீன்தாஜ், நடந்ததா? இல்லையா? என்று தெரியாத ஒன்றை கூறியுள்ளார். தன்மீது சையது சாத்தானை ஏவி விட்டார். அந்த சாத்தான் தான் என்னை பயன்படுத்தி அவரை கொலை செய்தது. எனக்கு ஒன்றும் தெரியாது. காவல்துறையினரிடம் நவீன்தாஜ் கூறிய திகில் கதை இதுதான். ஆனால் அந்தக் கதையை காவல்துறையினர் நம்பவில்லை. முதலில் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறி நாடகமாடிய நவீன்தாஜ், தற்போது சாத்தான் கதையை கூறுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close