[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்
  • BREAKING-NEWS சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் 2019 இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்
  • BREAKING-NEWS கொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது
  • BREAKING-NEWS இலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

விஷம் கொடுத்து குழந்தைகளை கொன்ற அம்மாவைத் தேடுகிறது போலீஸ்!

mother-killed-her-children

குன்றத்தூரில், பெற்ற குழந்தைகளை விஷம் வைத்து கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ள தாயை, மூன்று தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை, அகதாவரன் கோவில் தெருவில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தவர் விஜய் (30). தனியார் வங்கியில் கடன் வாங்கி கொடுக்கும் பிரிவில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அபிராமி (25), இவர்களுக்கு திருமணம் ஆகி அஜய் (7), என்ற மகனும், கார்னிகா (4), என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாத கடைசி என்பதால் விஜய் இரவு வீட்டிற்கு வராமல் அலுவலகத்திலேயே தங்கி விட்டார். 

இன்று அதிகாலை வீட்டிற்கு விஜய் வந்தபோது வீட்டின் கதவு வெளிப்புறம் சாத்தப்பட்டு இருந்தது. கதவை திறந்து பார்த்தபோது இரண்டு பிள்ளைகளும் வாயில் நுரை தள்ளியபடி கட்டிலில் இறந்து கிடப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார். அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஒடி வந்து பார்த்து விட்டு குன்றத்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரண்டு பிள்ளைகளையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். 

இதில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், மேலும் அபிராமிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் நேற்று இரவு, குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துவிட்டு தப்பி இருக்கலாம் என சந்தேக்கின்றனர். மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

அபிராமி கைது செய்தால் மட்டுமே உண்மைநிலை தெரியவரும் என்பதால், அவரை கைது செய்ய போருர் உதவி ஆணையர் தலைமையில் குன்றத்தூர் ஆய்வாளர் சார்லஸ், மாங்காடு ஆய்வாளர் கிருஷ்ண குமார் உட்பட  3 ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. 

முதல் கட்டமாக விஜயிடம் விசாரணை மேற்கொண்டுள்ள காவல்துறையினர், அபிராமியின் நண்பர்கள், உறவினர்களையும் விசாரிப்பதோடு செல்போன் தொடர்புகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close