[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS தருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
  • BREAKING-NEWS மத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS 3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி
  • BREAKING-NEWS அடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS இலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்

வீட்டில் ஓய்வில் இருந்த மாணவிக்கு பாலியல் வன்கொடுமை !

sexual-abuse-of-a-woman-in-the-house

தூத்துக்குடியில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக நிலத்தரகரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இலுப்பையூரணியை சேர்ந்தவர் குழஞ்சியப்பன். இவர் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மரகதம். இவர் தீப்பெட்டி ஆலையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுடைய 17 வயது மகள் கோவில்பட்டியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். அவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த 2 நாள்களாக கல்லூரி செல்லமால் வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் வீட்டிற்குள் தண்ணீர் கேட்பது போல சென்று, அவரை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பியோடியுள்ளார். இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் விரைந்து வந்து, இது தொடர்பாக கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் பாதிக்கப்பட்ட மாணவியை சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய கார்த்திக்கையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக்கை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்து மகளிர் காவல் நிலையத்தினை முற்றுக்கையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தினை கைவிட்டு சென்றனர். 

இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் ஒன்றிய, மாவட்ட அளவிலான பொறுப்பில் இருந்தவர் என்பது சமீபகாலமாக கட்சியில் இருந்து கார்த்திக் விலகி இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close