[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.61 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்
  • BREAKING-NEWS கோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு

கருணாநிதி நினைவேந்தல் கூட்டம்: பல கட்சி தலைவர்கள் பேசியது என்ன?

paying-rich-tributes-to-karunanidhi-opposition-calls-for-unity-against-bjp

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் தேசிய கட்சிகளின் மூத்த தலைவர்கள், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்துகொண்டு கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தினர்.

50 ஆண்டுகள் திமுக தலைவராக இருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நினைவேந்தல் கூட்டம் சென்னை நந்தனத்தில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவ கவுடா, பாஜக சார்பில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, காங்கிரஸ் கட்சியின் சார்பில் குலாம் நபி ஆசாத், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, திரிணமூல் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் எம்பி டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பங்கேற்றனர். "தெற்கில் உதித்தெழுந்த சூரியன்" என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் அங்கு அமைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் புகைப்படத்திற்கு மலர்த்தூவி தலைவர்கள் மரியாதை செலுத்தினர். மாநில சுயாட்சிக்காகவும், தேசிய அளவில் ஜனநாயகத்திற்கு உழைத்த சிந்தனையாளர் என அரசியல் தலைவர்கள் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினர்.

         

திமுக தலைவராக இருந்த கருணாநிதி இந்திய அளவில் அரசியலில் பல மாற்றங்களை செய்தவர் என்பதால் தேசிய தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்துவதாக அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

முற்போக்கு சிந்தனையாளராக விளங்கியவர் கருணாநிதி என மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி புகழாரம் சூட்டினார். நிதின் கட்கரி பேசுகையில், “தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாது நாட்டின் ஜனநாயகத்தைக் காக்க பெரும் பாடுபட்டவர் கருணாநிதி என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தேசியத் தலைவரான கருணாநிதியின் மறைவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது. உறுப்பினர் இல்லாத ஒருவருக்காக நாடாளுமன்ற அவைகள் ஒத்திவைக்கப்பட்டது இதுவே முதன்முறை. அதுவே கருணாநிதிக்கு நாம் செய்யும் மிகப்பெரிய மரியாதையாகும்” என்று கூறினார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி ஒரு சமூகப் போராளி என்று பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் புகழாரம் சூட்டினார். , “கருணாநிதி சமூக நீதி மற்றும் சமத்துவத்துக்கான போராளியாக வாழ்ந்தார். நலிந்த மற்றும் பிற்பட்ட மக்களின் உயர்வுக்காக தனது வாழ்நாள் முழுவதும் போராடியவர் கருணாநிதி. கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பவராகவும், ஜனநாயக உரிமைகளின் காவலராகவும் கருணாநிதி திகழ்ந்தார். தொடர்ந்து பல ஆண்டுக்காலம் கட்சி மற்றும் மக்களுக்காக அயராது உழைத்த சமூக சீர்திருத்தவாதி கருணாநிதி” என்றார் நிதிஷ் குமார்.

நாட்டி‌ன் கூட்டாட்சிமுறை அபாயகர நிலையை சந்தித்தபோது ‌மாநில கட்சிகளை ஒன்‌றிணைத்தவர் கருணாநிதி என முன்னாள் பிரதமர் தேவகவுடா புகழாரம் சூட்டினார். அவர் பேசுகையில், “நாட்டின் கூட்டாட்சிமுறை அபாயகரமான நிலையில் இருந்தபோது மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்து பலம் கண்டது மிகவும் முக்கியமானது. ஏழைகளின் நலனுக்காகவே வாழ்ந்த மிகச்சிறந்த தலைவர் கருணாநிதி” என்றார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close