மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்க தேசிய கட்சிகளின் மூத்த தலைவர்கள், 4 மாநிலங்களின் முதலமைச்சர்கள் இன்று சென்னை வருகின்றனர்.
50 ஆண்டுகள் திமுக தலைவராக இருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நினைவேந்தல் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. "தெற்கில் உதித்தெழுந்த சூரியன்" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த நினைவேந்தல் கூட்டம் நந்தனம் YMCA திடலில் மாலை 4 மணிக்குத் தொடங்குகிறது.
இக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவ கவுடா, காங்கிரஸ் கட்சியின் சார்பில் குலாம் நபி ஆசாத், பாஜக சார்பில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் எம்பி டெரிக் ஓ பிரையன் ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read Also -> “திராவிட இயக்கத்தின் இலக்குகள் இரண்டு” - திமுக தலைவர் ஸ்டாலினின் முதல் கடிதம்
இதுதவிர பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோரும் கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - ஆளுநரின் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவு
புரோ கைப்பந்து லீக் - சென்னை-கொச்சி அணிகளிடையே நாளை அரை இறுதி
“பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுக்க நடவடிக்கை” - நிதின் கட்காரி
மும்பை தாக்குதலுக்கு காரணமான ஹபீஸ் சயீத்தின் அமைப்புக்கு பாகிஸ்தான் தடை
அதானி மருத்துவமனையில் ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பு - குஜராத் அரசு