[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

70 சதவீதம் ஏலக்காய் செடிகள் நாசம்... விலையோ கிடுகிடு..

the-price-of-cardamom-has-increased-due-to-kerala-flood

மழையால் 70 சதவீதம் ஏலக்காய் செடிகள் வரத்து குறைந்ததால் ஏலக்காய் விலை அதிகரித்துள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இரண்டு மாதங்களாக கன மழையாக பெய்ததால் மாவட்டம் முழுவதும் 11,340 ஹெக்டேர் பயிர்கள் நாசமாகி 62 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 70 சதவீதம் ஏலக்காய் செடி என்பதால், வழக்கமான ஏலக்காய் வரத்து குறைந்துள்ளது. இதனால் ஏலக்காய் விலை கிலோ 1,600 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. 

இந்திய ஏலக்காய் உற்பத்தியில் கேரளா முதலிடம் வகிக்கிறது. மொத்த உற்பத்தியில் 60 சதவீதம் கேரளாவிலும், 30 சதவீதம் கர்நாடகாவிலும்,
மீதமுள்ள 10 சதவீதம் தமிழகம், அஸ்ஸாம் என இதர மாநிலங்களிலும் உற்பத்தியாகிறது. கேரளாவின் ஏலக்காய் உற்பத்தியில் இடுக்கி மாவட்டம் முதலிடம் பிடிக்கிறது. மாநிலத்தின் 80 சதவீத ஏலக்காய் உற்பத்தி இடுக்கி மாவட்டத்தில்தான் நடக்கிறது. இந்நிலையில் இடுக்கி மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஒரு வாரம் முன்னதாகவே மே இறுதி வாரத்தில் துவங்கி, தொடர்ந்து ஜூன் முதல்வாரத்தில் பலத்த காற்றுடன் கன மழையாக பெய்தது. சாரலாக தொடர்ந்த மழை ஜூலையில் இடைவிடாத கன மழையாகவும், ஆகஸ்ட் முதல் வாரத்தில் அதிதீவிர கன மழையாகவும் தீவிரமடைந்தது. 

மேலும் நிலச்சரிவுகளால் வீடுகள் சேதமடைந்தும், உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், இடுக்கி மாவட்ட பிரதான தொழிலான விவசாயமும் முற்றிலும் அழிந்ததுள்ளது. குமுளி துவங்கி ஆனவிலாசம், சக்குபள்ளம், சாஸ்தாநடை, வண்டன்மேடு, புளியமலை, சாந்தம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் 11,340 ஹெக்டேர் பரப்பில் ஏலச்செடிகள் சேதமடைந்துள்ளது. இதனால் ஏலக்காய் விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. 

மத்திய அரசின் “ஸ்பைசஸ் போர்ட் ஆஃப் இண்டியா” எனும் நறுமணப்பொருள் வாரியம் சார்பில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் புத்தடியிலும், தேனி மாவட்டம் போடியிலும் ஏலக்காய் ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. இடுக்கி மாவட்டத்தின் மட்டும் வண்டன்மேடு, நெடுங்கண்டம், தேக்கடி உள்ளிட்ட 12 நிறுவனங்கள் இந்த ஏலக்காய் ஏலத்தை நடத்துகின்றன.

இதில் அதிகபட்சமாக கிலோ 1,100 ரூபாயாக இருந்த ஏலக்காய் தற்போது கிலோ 1,600 ரூபாய் வரையிலும், சராசரியாக 800 முதல் 900 ரூபாய் வரை விலைபோன ஏலக்காய் கிலோ 1,100 முதல் 1,200 ருபாய் வரையிலும் விலையேற்றம் பெற்றுள்ளது. ஏலக்காய் விலையேற்றம் மகிழ்ச்சி தரும் விஷயம் என்றாலும் விவசாயிகளிடத்தில் ஏலக்காய் இருப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு செடிகள் அழிந்ததால் ஏற்பட்ட இழப்பு இடுக்கி மாவட்ட ஏலக்காய் விவசாயிகளை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close