[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.66 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.63 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

பேருந்துகளை பராமரிக்கக்கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம்..!

man-filed-case-for-bus-maintenance-chennai-high-court-fined

அரசு பேருந்துகளை பராமரிக்கக்கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு மேலான பேருந்துகளை மாற்றக்கோரி ஜவஹர்லால் சண்முகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், அரசு பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும், பேருந்து நிலையங்கள் மற்றும் நிறுத்தங்கள் ஆகியவற்றை நவீனப்படுத்த வேண்டும், பேருந்துகளில் பயணிகளுக்கு சீட் பெல்ட் முறை கொண்டுவரப்பட வேண்டும், அரசு பேருந்துகளை நவீனப்படுத்த வேண்டும் என அவர் தனது மனுவில் வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பொது நல வழக்கு என்ற பெயரில் விளம்பரத்திற்காக வழக்கு தொடரப்படுவதாக கூறிய நீதிபதிகள், ஜவஹர்லால் சண்முகத்திற்கு ரூபாய் 10,000 அபராதம் வழங்கி உத்தரவிட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close