[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இருசக்கர வாகனத்தை ஓட்டுபவருடன் பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்- உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஹெல்மெட் கட்டாயம் என்பதை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இருசக்கர வாகனங்களை விற்கும் நிறுவனங்களே ஹெல்மெட்டையும் இலவசமாக வழங்க வேண்டும்- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வாகன ஆய்வாளர் வங்கி லாக்கரில் 9.5 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி

சென்னையின் குடிநீர் ஆதார ஏரிகளில் வெறும் 10% தண்ணீர்.

only-10-water-in-chennai-water-supply-lakes

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களான செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் 10 சதவிகித தண்ணீர் மட்டுமே இருப்புள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் உள்ளன. சோழவரம் ஏரி 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. ஆனால் இன்றைய நிலவரப்படி, சோழவரம் ஏரியில் 1 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. 3,231 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 13 மில்லியன் கன அடி நீர் உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாக இருக்கும் நிலையில் தற்போது 467 மில்லியன் கன அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. 3,300 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 753 மில்லியன் கன அடி நீர் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக 4 ஏரிகளிலும் 10 சதவிகித நீர் மட்டுமே இருப்புள்ளது. ஆனால் பிற குடிநீர் ஆதாரங்கள் வலுவாக இருப்பதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close