[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி
  • BREAKING-NEWS 21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
  • BREAKING-NEWS மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிற்கு எதிரான முடிவை அதிமுக எடுத்துள்ளது - அதிமுக-பாமக கூட்டணி குறித்து திருமாவளவன்

மைலேஜ் அதிகரிக்க, பெட்ரோலை மிச்சப்படுத்த.. : கலக்கல் டிப்ஸ் !

tips-for-mileage-and-petrol-saving

பெட்ரோலின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. வாகனங்கள் இயக்கத்திற்கு மூலப்பொருளாக உள்ள பெட்ரோல் மனித வாழ்வில் அத்தியாவசிய தேவையாக மாறியுள்ளது. இந்தப் பெட்ரோலை அடுத்தடுத்து வரும் தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. அத்துடன் பெட்ரோலை மிச்சப்படுத்துவதன் மூலம் நமக்கு அன்றாட செலவும் குறைகிறது. அவ்வாறு பெட்ரோலை சேமிப்பதற்கான சில வழிகளை தமிழ்நாடு பெட்ரோலிய டீலர்கள் சங்கள் வெளியிட்டுள்ளது. 

டிப்ஸ் :

  • சிக்னலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்தால் இன்ஜினை அணைத்து வையுங்கள். இதனால் பெட்ரோல் வீணாவதை தவிர்க்கலாம். 
  • கிளட்ச், பிரேக் போன்றவற்றை தேவை இல்லாமல் அழுத்திக்கொண்டிருந்தால் வெகு வேகமாக எரிபொருள் காலியாக ஆரம்பிக்கும். 
  • நிழலில் வாகனத்தை நிறுத்தினால் பெட்ரோல் வீணாவதை பெருமளவு தவிர்க்கலாம். 
  • வாகனங்களை நிறுத்தியவுடன் இன்ஜினையும் நிறுத்தி வைக்க வேண்டும். 
  • எக்ஸாஸ்ட் பாதையில் எந்தவித ஓட்டையோ, அடைப்போ இருக்கக்கூடாது. 
  • வாகனத்தைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து பழுது நீக்கிப் பராமரிக்க வேண்டும். இல்லையென்றால் 20 சதவீத மைலேஜ் குறையும்.
  • பெட்ரோல் - டீசலை குறைவாகப் பயன்படுத்த வாகன டயர்களில் பரிந்துரைக்கப்பட்ட காற்றழுத்தத்தைப் பராமரிக்க வேண்டும். காற்றழுத்தம் குறைந்து இருந்தால், எரிபொருள் செலவு அதிகமாகும். 
  • இந்தியச் சாலைகளில் 45 - 55 கிலோ மீட்டர் வேகத்தில் வண்டியை ஓட்டினால் 40 சதவீதம் எரிபொருளை சேமிக்க முடியும். 
  • வாகனத்தில் போதுமானளவு ஆட்களை மட்டுமே ஏற்ற வேண்டும். அதிக எடையை வாகனம் சுமந்து செல்லும் போது எரிபொருள் செலவு அதிகரிக்கும். 
  • ஸ்பீடாமீட்டரில் சிவப்புக்கு முன்னதாக குறிக்கப்பட்டுள்ள மிதமான வேகத்தில் செல்வதே மிகச் சிறந்தது. அதிக வேகத்தில் செல்வதால் எரிபொருள் செலவு அதிகரிப்பதுடன், வண்டியின் பாகங்களை விரைவில் பழுதாக்கிவிடும். 
  • பழக்கமில்லாத, புதிய பாதைகளில் செல்லும்போது, சரியாக விசாரித்து விட்டுச் செல்ல வேண்டும். இதனால் இடத்தைத் தேடுவதற்கான நேரம், எரிபொருள் செலவைக் குறைக்கலாம். 
  • பெட்ரோல் - டீசல் டாங்கில் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிக எரிபொருளை நிரப்பக்கூடாது. பெட்ரோல் - டீசல் நிரப்பிய பிறகு, அதனை சரியாக மூடுவதன் மூலம் எரிபொருள் செலவைக் குறைக்க முடியும். 
  • கார்களில் குளிரூட்டும் இயந்திரத்தைப் பயன்படுத்தினால் எரிபொருள் செலவைப் பெருமளவு அதிகரிக்கும். ஆனால் குளிரூட்டும் இயந்திரத்தைப் பயன்படுத்தாமல் இருந்தால் குறைந்தபட்சம் 10 சதவீத எரிபொருளைச் சேமிக்க முடியும். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close