[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

ஸ்பெயினில் சாதிக்க விசா கிடைக்குமா ? ஏக்கத்தில் தமிழக வீராங்கனை !

tamil-nadu-sport-person-will-get-a-visa-to-achieve-in-spain

கோவையை சேர்ந்த 35 வயது பெண்மணி, பல தடைகளை தாண்டி தேசிய அளவில் பதக்கங்களை குவித்து , தற்போது சர்வதேச அளவிலான மூத்தோருக்கான தடகள போட்டியில் பங்குபெறும் வாய்பை பெற்றும் ஸ்பெயின் செல்வதற்கு விசா தற்போது வரை கிடைக்காததால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

கோவையை அடுத்த ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் வசந்தி. இவர் கடைகள் மற்றும் வீடுகளில் பாத்திரம்  கழுவி தனது குடும்பத்தை நடத்தி வருகிறார். இவரது கணவர் தனியார் பேருந்தில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் மற்றும் மகன் தடகளத்தில் சாதித்து வருகின்றனர். அதே போல ஐவரும்  மூத்தோருக்கான தடகள போட்டியில் சாதித்து வருகிறார்.  35 வயதாகவும் வசந்தி,குடும்பத்தின் வறுமை காரணமாக மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று அதன் மூலம் வரும் பரிசை பெறுவதற்காக விளையாட்டில் ஈடுபட்டு வந்த இவர் , தற்போது இவரின் சாதனை சர்வதேச அளவில் செல்ல உள்ளது. மாவட்ட , மாநில அளவில் சாதித்த வந்த இவர்,கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெங்களூரில் நடந்த தேசிய அளவிலான மூத்தோருக்கான தடகள போட்டியில் ஓட்டப்பந்தய போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை குவித்து தற்போது ஸ்பெயினில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள தடகள போட்டியில் பங்குபெறும் வாய்பை பெற்று உள்ளார். 

தற்போது அடுத்த மாதம் ஸ்பெயினில் கலந்து கொள்ளும் விளையாட்டிற்காக விசாவிற்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால் போதிய உதவிகள் யாரும் செய்யாததால் விசா கிடைக்காமல் அலைக்கழிப்பதாக புகார் தெரிவித்து உள்ளார். சென்னை,பெங்களூர் என பல பகுதிகளுக்கு சென்று முறையிட்டும் தற்போது அனைத்து விளையாட்டுகளிலும் பங்குபெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்களோ என்ற அச்சத்தில் இருப்பதாக கூறுகிறார். வருகிற 3 ஆம் தேதிக்குள் ஸ்பெயின் நாட்டிற்கு செல்ல வேண்டியுள்ளதால் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவையில் உள்ள தடகள சங்கமும் போதிய ஆதரவு அளிக்கவில்லை எனவும் புகார் தெரிவித்து உள்ளார். ஏற்கெனவே இவருக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க நிதியுதவி தேவைப்படுவதாக புதிய தலைமுறை செய்தியில் ஒளிப்பரப்பாகியது. இதனை அடுத்தும் பலரும் இவருக்கு நிதியுதவி அளித்தனர். இந்நிலையில் தற்போது விசா கிடைக்கததால் போட்டியில் பங்குபெற முடியுமா என்ற ஏக்கத்தில் உள்ளார். சாதாரண குடும்பத்தில் இருந்தாலும் சாதித்து காட்ட வேண்டும் என்ற முயற்சியில் இந்த அளவிற்கு சாதிக்க வைத்து உள்ளதாகவும், தொடர்ந்து இவரது சாதனைகள் தொடர தற்போது உதவிகள் தேவைப்படுவதாகவும், அதன் மூலம் இவரது சாதனைகள் இன்னும் தொடர்ந்து நாட்டிற்கு பெருமை சேர்ப்பார் என கூறுகிறார் அவரது கணவர் .

பல தடைகளை கடந்து சாதித்து வரும் வசந்தி, தற்போது சர்வதேச போட்டியில் பங்குபெற வேண்டும் என்பதன் காரணமாக தற்போது எந்த வேலைக்கும் செல்லாமல் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வந்து உள்ளார் . ஆனால் தற்போது விசா கிடைக்கததால்  ஸ்பெயின் சென்று விளையாட முடியுமா என தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. எனவே அரசு உதவினால் தொடர்ந்து சாதித்து நாட்டிற்கு பெருமை சேர்க்க முடியும் என வேண்டுகோள் வைத்துள்ளார்.

இது குறித்து கோவையில் உள்ள தடகள சங்க அதிகாரிகளை கேட்டபோது, வசந்திக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து உள்ளதாகவும், விசா ஏன் கிடைக்கவில்லை என தெரியவில்லை என கூறியுள்ளனர். மேலும் மூத்தோருக்கான இந்திய தடகள சங்கத்தினர் , தாமதமாக வசந்திக்கு கடிதம் அளித்ததன் காரணமாகவே , இவருக்கு விசா கிடைக்க தாமதம் ஆவதாகவும் கூறினர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close