[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

தமிழக ஆசிரியைக்கு தேசிய நல்லாசிரியர் விருது

national-best-teacher-award-for-tn-teacher

தமிழகத்தை சேர்ந்த ஸதி என்ற ஆசிரியைக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து 6 ஆசிரியர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், கோவையை சேர்ந்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஸதிக்கு மட்டுமே இந்த ஆண்டு விருது வழங்கப்படுகிறது. ஆசிரியர் தினமான வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நல்லாசிரியர் விருதினை வழங்க உள்ளார்.

50 ஆயிரம் ரூபாய் பணம், சான்றிதழ் மற்றும் சில்வர் மெடல் ஆகியவை ஆசிரியை ஸதிக்கு வழங்கப்படும். கடந்த ஆண்டு தமிழகத்தை சேர்ந்த 22 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஒருவருக்கு மட்டுமே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் சார்பில் அனைத்து மாநிலங்களிலும் இருந்து ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு தேசிய அளவில் 350 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 45 பேருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அதில் ஒருவர் மட்டுமே தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close