[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

உயிருக்கு போராடிய மீனவர்கள் - மீட்ட இலங்கை கடற்படை

indian-fishermen-rescued-by-srilankan-naval-officers

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் மீனவர்களின் படகு நடுக்கடலில் முழ்கியது, ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த ஆறு மீனவர்களை மீட்ட  இலங்கை கடற்படையினர் கங்கேசன்தறை போலிஸாரிடம் ஒப்படைத்தனர். நேற்று காலை புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான விசைபடகில் மழுன் பிடிக்க சென்ற பாலமருகன்,கடல்ராஜா,முத்துபாண்டி,திருமேனி,முருகன்,முத்து ஆகிய ஆறு மீனவர்களும் நெடுந்தீவுக்கும் கோவிலாம் லைட்ஹவுஸ் பகுதிக்கும் இடையே 15 நாட்டிக்கள் தொலைவில்  மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது நடுக்கடலில் ஏற்பட்ட திடீர் சூறை காற்றில் அடித்துச் செல்லப்பட்ட படகு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையின் ரோந்து படகில் மோதி முற்றிலும் சேதமடைந்து நடுக்கடலில் முழ்கியது

நடுக்கடலில் உயிருக்கு போராடி கொண்டிருந்த ஆறு மீனவர்களையும்  இலங்கை கடற்படைக்கு சொந்தமான  சிறிய ரக  விரைவு ரோந்து படகில் சென்ற இலங்கை கடற்படை வீரர்கள் மீட்டனர், மீட்கப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்க்கு அழைத்து  சென்று முதலுதவிகள் வழங்கப்பட்டு பின்னர் காங்கேசன்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனா. விசாரணையில் மீனவர்கள் காற்றின் காரணமாகவே எல்லை தாண்டி வந்ததாக தெரிய வந்ததையடுத்து அவர்கள் மீது எல்லை தாண்டிய  வழக்க பதிவு செய்யாமல், உயிரை காப்பாற்றி கொள்ளவே இலங்கை பகுதிக்கு வந்ததாக முதல் தகவல் அறிக்கை  போலிஸாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close