[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

இன்று மாலையுடன் ஓய்கிறது பரப்புரை: எல்லா வகையான விளம்பரத்துக்கும் தடை

election-campaign-finishes-today-evening-6

இன்று மாலை 6 மணியோடு பரப்புரை நிறைவடையும் நிலையில், அதன் பிறகு வேட்பாளர்கள், கட்சிகள், சின்னங்கள் குறித்து எந்த வகையான விளம்பரமும் செய்யக்கூடாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். 86 சதவீத அளவுக்கு பூத் ஸ்லிப் கொடுக்கப்பட்டது என்று கூறிய லக்கானி, வாக்குச்சாவடி மையங்களுக்குள் யாரும் செல்போன் கொண்டுசெல்லக்கூடாது‌ என்றார்.

சில அதிகாரிகளுக்கு மட்டுமே பணிநிமித்தமாக செல்போன் பேச அனுமதிக்கப்படும் என்று கூறிய லக்கானி, தமிழகத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகள் 9 ஆயிரத்து 360ல் இருந்து 6,300 ஆக குறைக்கப்பட்டுள்ளன என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close