[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

“கலகலனு ஊரு கெத்தா மெட்ராஸ் சிட்டினு பேரு” - ஹர்பஜன் வாழ்த்து

harbhajan-singh-tweet-about-chennai-birth-day

சென்னை மாநகரம் தனது 379-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறது. இதற்கு பல தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரான ஹர்பஜன் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில், சென்னைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்தை சென்னைத் தமிழிலேயே அவர் கவிதை போல கூறியுள்ளார்.

அதில், “கல கல னு ஊரு கெத்தா மெட்ராஸ் சிட்டி னு பேரு
பரபரப்ப பாரு இங்க மக்கள் கூட்டம் ஜோரு
ஐபில் னு அந்த பக்கம் வந்தோம் ஒரு நாளு அது செம தாறு மாறு 
என்னைக்கும் எங்களுக்கு சென்னை ஒரு தாய் வீடு தான்
இன்னக்கி ஊருக்கு 379வது பிறந்தநாள் 
வாழ்த்துக்கள் சொல்லிக்குறேன்” என எழுதியுள்ளார்.

Read Also -> எப்போதெல்லாம் வீழ்கிறதோ அப்போதெல்லாம் மீண்டெழும் சென்னை !

இந்தக்கவிதையும் அவர் சென்னையின் பிரபல இடங்களின் புகைப்படங்களையும் இணைத்து பகிர்ந்துள்ளார். அதில் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம், உயர்நீதிமன்றம், நேப்பியர் பாலம், மெரினா உழைப்பாளர்கள் சிலை, வள்ளுவர் கோட்டத்தேர், பார்த்தசாரதி கோவில், எல்.ஐ.சி, திருவல்லிக்கேணி பெரிய மசூதி, கலங்கரை விளக்கம், அண்ணா நினைவிடம், சாந்தோம் சர்ச் உள்ளிட்ட புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close