[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை

379-வது பிறந்த நாளை கொண்டாடும் ‘சென்னை’ உருவான கதை..!

happy-birthday-to-chennai

சென்னை மாநகரம் தனது  379-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறது. இந்த தருணத்தில் சென்னை நகரம் உருவான கதையை தெரிந்து கொள்வோம்.

வங்கக் கடலோரம் மணல் திட்டாக இருந்த ஒரு சிறிய பகுதிதான் இன்றைய சென்னைக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தது. பரந்து விரிந்திருந்த அந்த மணல் திட்டு பகுதியை அதன் உரிமையாளர்களான தாமல் சென்னப்பநாயக்கரின் மகன்களான ஐயப்ப நாயக்கர், வெங்கடப்ப நாயக்கர் ஆகியோரிடம் இருந்து 1639-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி பிரான்சிஸ் டே என்ற ஆங்கிலேய வணிகர் வாங்கினார். அந்த இடத்தில் கிடங்கு ஒன்றையும் அமைத்து வணிகம் செய்தார். அந்த இடம்தான் தற்போது தலைமைச் செயலகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை. இந்த நிலப்பரப்பை பிரான்சிஸ் டே வாங்கிய நாளான ஆகஸ்ட் 22-ஆம் தேதியை மையமாக வைத்தே சென்னையின் பிறந்ததினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று சென்னை என்றும் அன்று மெட்ராஸ் என அறியப்படும் இடத்தில் காலூன்றிய ஆங்கிலேயர்கள் ஜார்ஜ் டவுன் என்ற பகுதியை உருவாக்கி அங்கு உள்ளூர் மக்களை குடியமர்த்தினர். இதுமட்டுமின்றி திருவல்லிக்கேணி, எழும்பூர், மயிலாப்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட கிராமங்கள் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்றன. இதையடுத்து வளர்ந்த தொழில்கள் மற்றம் வணிகத்தால் தென்னிந்தியாவின் நுழைவு வாயிலாக சென்னை மாறியது. பஞ்சம் பிழைப்பதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து கூலித் தொழிலாளிகளாக பல்லாயிரக்கணக்க்கான மக்கள் தஞ்சம் புகத் தொடங்கினர். அன்று தொடங்கிய இந்த வளர்ச்சிதான் இன்றைய பிரமாண்டமான சென்னைக்கு விதை எனலாம். தற்போது சென்னை இந்தியாவின் 4ஆவது பெரியநகரமாகவும் உலக அளவில் முக்கியமான மாநகரங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

வாகனத் தொழிற்சாலைகள், மென்பொருள் சேவைகள், மருத்துவம், நிதி சேவைகள், பல்வேறு தொழிற்சாலைகள் என பிரமாண்ட வளர்ச்சியை சென்னை எட்டியுள்ளது. வாகன உற்பத்தித் தொழிலில் தெற்காசியாவின் டெட்ராய்ட் எனப்படும் சென்னை இந்திய மருத்துவ சுற்றுலாத் தொழிலின் தலைநகரமாகவும் விளங்கி வருகிறது.

இந்திய அளவில் மென்பொருள் ஏற்றுமதியில் இரண்டாம் இடம் வகிக்கும் சென்னை, மின்னணு பொருட்கள் தயாரிக்கும் மையமாகவும் திகழ்கிறது. வரும் 2025ஆம் ஆண்டில் சென்னையின் பொருளாதாரம் 150 பில்லியன் டாலராக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சாதாரண வணிக கிடங்கிற்காக உருவான சென்னை தற்போது உலகின் வணிக மையங்களில் ஒன்றாக உருமாறியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close